ஆஃபரில் Infinix 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி (Infinix Hot 60i 5G) போனுக்கு 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி அம்சங்கள் (Infinix Hot 60i 5G Specifications): தரமான ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core 6nm MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். பின்பு ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portraits), சூப்பர் நைட் (Super Night), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ எஸ்டென்டர் (AI Extender) அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் (AI Image Generator), ஏஐ கால் டிரான்லேஷன் (AI Call Translation) வசதியும் இந்த போனில் உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதில் பிடிஏஎப் (PDAF) போகஸ் மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்கள்,120Hz ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 240Hz டச் சாம்பிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
IP64 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் உடன் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு ஸ்லீக் பிளாக், ஷேடோ ப்ளூ, மான்சூன் கிரீன் மற்றும் பிளம் ரெட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
அதுவும் 6000mAh பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications