Home
Deal of the day

முடிவை இன்றே எடுங்கள்- ரூ.8,799 முதல் உச்ச அம்ச ஸ்மார்ட்போன்கள்- அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை!

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை நேரலையில் இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகை தின விற்பனையில் பல்வேறு தயாரிப்புகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் தொடங்களில் எந்த ஒரு கேட்ஜெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இது சரியான நேரமாகும்.

ரூ.8799 முதல் உச்சஅம்ச ஸ்மார்ட்போன்கள்- அமேசான் கிரேட்இந்தியன் விற்பனை

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது. பல்தேவைகளுக்கு ஸ்மார்ட்போன் பிரதான பயன்பாடாக மாறிவருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் தொடங்கி பல தேவைகளுக்கு ஸ்மார்ட்போன் அவசியம். பலரும் ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டிருந்தாலும், அதன் விலையில் முரண்பாடு இருந்திருக்கும், தற்போது அதற்கு தீர்வு கிடைத்திருக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதற்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையில் கூடுதல் சலுகையும் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் ரூ.4500 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது இது ரூ.12,499 ஆக இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட் உடன் வருகிறது. பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 6 மாத ஸ்க்ரீன் பரிமாற்ற வசதியும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் 26% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் இன்பினிட்ட ஓ-கட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 800 நிட்ஸ் உச்சநிலை பிரைட்னஸ் வசதியோடு வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் நான்கு கேமராக்களும், 20 எம்பி செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 6000 எம்ஏஎச் பேட்டரி, சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இது வருகிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.19,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டார்க் நெபுளா வண்ண விருப்பத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்போது வருகிறது. 16 எம்பி முன்புற கேமரா, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி, முழு எச்டி ப்ளஸ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது.

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9499 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் இந்த சாதனம் ரூ.8799 ஆக இருக்கிறது. ரெட்மி 9 ஆக்டிவ் சாதனமானது கார்பன் பிளாக் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஒற்றை சேமிப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதியோடு வருகிறது. இது 13 எம்பி மற்றும் 2 எம்பி என இரட்டை கேமரா அமைப்போடு வருகிறது. 5 எம்பி செல்பி கேமரா வசதியோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்12 சாதனமானது பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் இந்த சாதனம் ரூ.9,499 ஆக இருக்கிறது. ரூ.10,000-த்துக்குள் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். 48 எம்பி பிரதான கேமராவுடன் நான்கு பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. 8 மெகாபிக்சல் முன்புற கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனம் ஆனது டார்க் நெபுளா வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற ஒற்றை வேரியண்ட் வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது 108 எம்பி குவாட் கேமரா அமைப்போடு வருகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே வசதி இருக்கிறது. இந்த சாதனத்தி விலை ரூ.22,999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் இந்த சாதனம் ரூ.18,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Huge Discount Announced For Smartphones in Amazon Great India Festival Sale 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X