ரூ.26,999 OnePlus போன் இப்போது வெறும் ரூ.16,999 க்கு.. 108MP கேமரா, 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி! என்ன மாடல்?
ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகதிற்கு முன்பாக, இதற்கு முன் வந்த ஒன்பிளஸ் மாடல்களை எல்லாவற்றையும் விற்றுத்தீர்த்துவிட வேண்டும் என்று அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் திட்டமிட்டுள்ளது போல தெரிகிறது. ஏனென்றால் தற்போது அமேசானில் ரூ.26,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெறும் ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்? நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? முழுதாக ரூ.10,000 தள்ளுபடி விலையில் வாங்க கிடைப்பது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இது அமேசான் வலைத்தளத்தில், அதன் எம்ஆர்பி விலையான ரூ.26,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டரோஜ் ஆப்ஷனின் ஆபர் விலையாகும்.

என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 2412 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 782G 6nm Mobile) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் + 8 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் 20x டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு, அல்ட்ரா ஸ்டெடி மோட் (Ultra Steady Mode), டூயல் வியூ வீடியோ (Dual-view Video), எச்டிஆர் (HDR), நைட்ஸ்கேப் (Nightscape), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), வீடியோ போர்ட்ராய்டு (Video Portrait) போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்டெடி மோட் ஆகிய கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதுதவிர்த்து 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. கூடுதலாக மெமரி எக்ஸ்டென்க்ஷனுக்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.
நம்பி வாங்கலாமா? ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்கள் இந்திய அறிமுகத்திற்கு தயாராகி வரும் நிலைப்பாட்டில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாமா என்கிற சந்தேகம் அல்லது கேள்வி உங்களுக்குள் எழுந்தால்.. முதலில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது - உங்களுடைய பட்ஜெட்!
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.77,000 வரை செல்லும் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13ஆர் ஆனது ரூ.50,000 ஒட்டிய பட்ஜெட்டில் அறிமுகமாகும். ஒருவேளை உங்களுடைய பட்ஜெட் ரூ.20,000 - ரூ.25,000 க்குள் தான் இருக்கிறது என்றால்.. நீங்கள் ஒன்பிளஸ் 13, 13ஆர் மாடல்களின் இந்திய அறிமுகம் குறித்து கவலைப்படவே கூடாது!


Click it and Unblock the Notifications