SALE மிரளுது.. ரூ.19,784 பட்ஜெட்ல 6600mAh பேட்டரி.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) ஹானர் நிறுவனத்தின் ஹானர் எக்ஸ்9சி 5ஜி (HONOR X9c 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 6600mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் எக்ஸ்9சி 5ஜி அமேசான் விலை (HONOR X9c 5G Amazon Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,001 விலை குறைப்பு போக ரூ.20,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1,250 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,784 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஹானர் எக்ஸ்9சி 5ஜி அம்சங்கள் (HONOR X9c 5G Specifications): இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் (2700 x 1224 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர் 10 (HDR 10) கிடைக்கிறது.
மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் கிடைக்கிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களை பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
லேட்டஸ்ட் யுஐ அனுபவம் கொடுக்கும்படி மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கேமராவில் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மட்டுமல்லாமல், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கிடைக்கிறது.
இந்த டெக்னாலஜிகளுடன் 108 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கிடைப்பதால், பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதுபோக 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
3டி கர்வ்ட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டும், 6600mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) உள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. இதில் 2 மீட்டர்கள் வரையில் டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்படுகிறது.
இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி மாடலில் டைட்டானியம் பிளாக் (Titanium Black) & ஜேட் சியான் (Jade Cyan) கலர்கள் இருக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. 7.98 எம்எம் தடிமன் மற்றும் 189 கிராம் எடை கொடுக்கிறது. பிரீமியம் டிஸ்பிளே மற்றும் கேமரா பீச்சர்களுக்கு இந்த ஹானர் மாடல் பக்காவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








