வந்து 4 மாசம் தான் ஆகுது.. அதுக்குள்ள திடீர்னு ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட Honor 5G போன்.. எந்த மாடல்?
நீண்ட மாதங்களுக்கு பிறகு ஹானர் நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில் 2 தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. அது ஹானர் 200 5ஜி (HONOR 200 5G) மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி (HONOR 200 Pro 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இவ்விரு மாடல்களுமே விலைக்கு ஏற்ற வொர்த் ஆன அம்சங்களை கொண்டுள்ளன.
இதற்கிடையில், அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது அறிமுகமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆகின்ற ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.10,000 டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது. தற்போது ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.39,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.

அதாவது ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் மீது நேரடியாக ரூ.10,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுதவிர்த்து 10% பேங்க் ஆபர் (Bank Offer) மற்றும் ரூ.1,454 முதல் தொடங்கும் இஎம்ஐ விருப்பங்களையும் (EMI Options) அமேசான் வழங்குகிறது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீதும் ரூ.10,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அமேசானில் இது அதன் எம்ஆர்பி விலையான ரூ.44,999 க்கு பதிலாக ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (4000nits Peak Brightness) உடனான 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை (FHD+ OLED Curved Display) கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Quallcomm Snapdragon 7 Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 8.0 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் (MagicOS 8.0) உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple rear camera setup) கொண்டுள்ளது. அதில் சோனி IMX906 லென்ஸ் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா + அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளன.
ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான ஹானர் 5ஜி ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால் 20% நேரடி தள்ளுபடி விலையின் கீழ் விற்பனையாகும் ஹானர் 200 லைட் 5ஜி (Honor 200 Lite 5G) ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.19,998 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல ஹானர் எக்ஸ்9பி 5ஜி (HONOR X9b 5G) ஸ்மார்ட்போன் ஆனது 19% நேரடி தள்ளுபடியை பெற்று தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.30,999 க்கு பதிலாக ரூ.24,998 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி (HONOR Magic 6 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது 18% நேரடி தள்ளுபடியை பெற்று தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.1.09,999 க்கு பதிலாக ரூ.89,998 க்கு வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications