Home
Deal of the day

ரூ.40,000 போன் ரூ.20,000 க்கு.. எந்த பேங்க் ஆபரும் இல்லாமல் சரி பாதியாக விலை குறைக்கப்பட்ட 5ஜி போன்!

அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளங்களில் 2025 பண்டிகை கால சிறப்பு விற்பனைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. இவ்விரு இ-காமர்ஸ் தளங்களுமே போட்டிபோட்டு கொண்டு மொபைல் போன் ஆபர்களை அள்ளி வழங்குவதால்.. எதை வாங்குவது என்கிற குழப்பம் வருவது சகஜம் தான். அதை தீர்ப்பது தானே எங்கள் வேலை!

அப்படியாக அமேசான் இந்தியா வலைதளத்தின் சிறப்பு விற்பனையான கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 (Great Indian Festival Sale 2025) விற்பனையில்.. சரியாக பாதிக்கு பாதி விலை குறைப்பை பெற்று.. ரூ.40,000 க்கு பதிலாக ரூ.20,000 க்கு வாங்க கிடைக்கும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

ரூ.40,000 போன் ரூ.20,000 க்கு.. பாதியாக விலை குறைக்கப்பட்ட 5ஜி போன்!

அது ஹானர் 200 5ஜி (Honor 200 5G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைதளத்தில், எம்ஆர்பி விலையான ரூ.39,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது எந்த பேங்க் ஆபரும் இல்லாத நேரடி விலை குறைப்பாகும்.

ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7 இன்ச் புல் எச்டி பிளஸ் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, சோனி IMX906 ப்ரைமரி சென்சார் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் இதே ரூ.20,000 ஐ சுற்றிய பட்ஜெட்டில் வேறு ஹானர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் ஹானர் எக்ஸ்9சி 5ஜி (Honor X9c) மாடலை கருத்தில் கொள்ளலாம். அமேசானில், இது எம்ஆர்பி விலையான ரூ.27.999 க்கு பதிலாக தற்போது ரூ.21,998 க்கு வாங்க கிடைக்கிறது.

ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 1.5கே கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 3எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் உடனான 108 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் ஆனது 6,600mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியை கொண்டுள்ளது. இது 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை தூசி எதிர்ப்பிற்கான ஐபி65எம் ரேட்டிங், 360 டிகிரி நீர்-எதிர்ப்பு கட்டமைப்பு, ஏஐ மோஷன் சென்சிங், ஏஐ ஏரேஸ், ஏஐ டீப்பேக் டிடெக்ஷன், ஏஐ மேஜிக் போர்டல் 2.0 மற்றும் ஏஐ மேஜிக் கேப்சூல் போன்ற ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 200 5G get Rs 20000 Direct Discount in Amazon Great Indian Festival Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X