Home
Deal of the day

ரூ.8000 பட்ஜெட்ல ஆர்டர் அனல் பறக்குது.. மேலும் விலை குறைந்த NOKIA-வின் லேட்டஸ்ட் HMD 5ஜி போன்!

நோக்கியா (NOKIA) நிறுவனத்தின் மொபைல் போன்களை மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவமானது வருகிற மே 21 ஆம் தேதி அன்று, இந்திய சந்தையில் அதன் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) மாடலாகும்.

இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 2025 இல் அறிமுகம் செய்யப்பட்ட.. வரப்போகும் எச்எம்டி வைப் 2 5ஜி மாடலுக்கு முன்பாக அறிமுகமான மாடல் ஆன எச்எம்டி வைப் 5ஜி (HMD Vibe 5G) மீது விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் மீதான இந்த 2 சலுகைகளும் பிளிப்கார்ட் சாசா லேலே 2026 விற்பனையின் (Flipkart SASA LELE 2026 Sale) ஒரு பகுதியாகும்.

மேலும் விலை குறைந்த NOKIA-வின் லேட்டஸ்ட் HMD 5ஜி போன்!

நினைவூட்டும்வண்ணம் எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மற்றும் பர்பிள் ஆகிய 2 கலர்களில், ரூ.8,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இது ஒரு சிறப்பு பண்டிகை கால விலை என்றும் எச்எம்டி நிறுவனம் கூறி இருந்தது. இப்போது, அந்த விலையில் மேலும் ரூ.500 குறைந்து, பிளிப்கார்ட்டில் ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.829 பேங்க் டிஸ்கவுன்ட்டும் கிடைக்கிறது.

எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனானது 720 × 1604 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 விஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் 6என்எம் யுனிசாக் டி760 சிப்செட கொண்டு இயங்குகிறது. இது குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ76 மற்றும் ஆக்டா கோர் கோர்டெக்ஸ் ஏ55 ஆகியவைகளை உள்ளடக்கிய மாலி-ஜி57 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மெமரியை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. இதற்கு LED ஃபிளாஷ் ஆதரவும் உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை பேக் செய்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான சார்ஜர் ரீடெயில் பாக்ஸ் உடன் வரும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம் ஆதரவலா கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 வருட காலாண்டு செக்யூரிரி அப்டேட்களை பெறும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (9 பேண்ட்ள்), டூயல் 4ஜி வோல்ட், வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் + க்ளோநாஸ், யூஎஸ்பி டைப்-சி ஆகியவைகளையும் கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் 165×75.8×8.65மிமீ மற்றும் எடையில் 190 கிராம் உள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Vibe 5g Gets Price Cut in Flipkart SASA LELE 2026 Ahead HMD Vibe 2 5G Launch on May 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X