கும்மாங்குத்து குத்தும் GOAT.. ரூ.3000 விலை குறைப்பு + ரூ.1325 பேங்க் சலுகை.. 6000mAh பேட்டரி HMD 5ஜி போன்!
அறிமுகமான நாளில் இருந்து செம்ம டிமாண்ட் ஆகி.. அடிக்கடி அவுட் ஆப் ஸ்டாக் ஆகி.. மீண்டும் மீண்டும் ஸ்டாக் ஏற்றப்பட்டு, பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் விற்பனைக்கு வந்த எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) ஸ்மார்ட்போன் ஆனது, தற்போது மீண்டும் அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிடும் போல தெரிகிறது. ஏனென்றால் பிளிப்கார்ட் கோட் சேலில் இந்த மாடலுக்கு கிடைக்கும் ஆபர் அப்படி!
நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, கடந்த மே மாத இறுதியில், இந்திய சந்தையில் எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) என்கிற புதிய பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது.

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் கோட் சேல் (Flipkart GOAT Sale) என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக. எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது நேரடி ரூ.3000 விலை குறைப்பாகும்.
இதோடு, ரூ.1325 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு சலுகையும் (Bank Credit Card Offer) கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனை காஸ்மிக் லாவெண்டர், நார்டிக் ப்ளூ மற்றும் பீச் பிங்க் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.
எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உடன் வரும் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ல் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 265ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் எச்டி பிளஸ் (720×1,600 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, இது 2.3GHz வரை கிளாக் செய்யப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் பிராசஸரில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டாண்டர்டாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ (AI) ஆதரவு கொண்ட ரியர் கேமரா யூனிட் உள்ளது.
அதில் எல்இடி (LED) ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, இந்த ஸ்மார்ட்போனில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. எச்எம்டி-யின் இந்த புதிய ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனில், ப்ளூடூத் 5.0, வைஃபை 5 மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் உள்ளன. மேலும், இதில் ஆக்சிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. கூடவே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது (இதற்கான சார்ஜர் பாக்ஸில் சேர்க்கப்பட்டு உ ள்ளது). கடைசியாக, அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 168×77.7×8.6 மிமீ உள்ளது மற்றும் எடையில் 210 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications