அடுச்சு பிடிச்சு வாங்குறாங்க.! ரூ. 5000 விலை முதல் அட்டகாசமான Smartphones -ஆ.!
5000 ரூபாய் விலை வரம்பில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்றால் யாருக்கு தான் ஆசை வராது.! உடனே நம்மளும் ஒன்று வாங்கலாம் என்று தானே எண்ணம் தோன்றும்..
வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறதோ இல்லையோ.! கட்டாயமாக, சரி அப்படி எந்த ஸ்மார்ட்போன் எவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்த பதிவிற்குள் வந்தவர்கள் உண்மையிலேயே லக்கி சார்ம்கள் தான்.

ஆம், இது போன்ற சலுகைகள் எல்லாம் நமக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை. ரூ.5000 விலை முதல் கைக்கு அடக்கமான டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுடன், இந்தியாவில் இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்டான பட்ஜெட் 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளோம்.
போன் வாங்குறோமோ இல்லையோ? எந்த போன் என்ன விலையில் கிடைக்கிறது என்று ஒரு கிளான்ஸ் விட டக்கென்று ஸ்க்ரோல் செய்யுங்கள்.
1. Tecno POP 6 Pro
இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடலாகும். இப்போது சலுகையுடன் இந்த டிவைஸை வெறும் ரூ. 5,999 என்ற விலைக்கு நாம் வாங்கலாம். இதில் கவனிக்க வேண்டிய சிறப்பான விஷயம் என்னவென்றால், இது Boat Bassheads இலவச ஹெட்போன்ஸ் உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 7,999 ஆகும்.
2. Tecno Pop 5 LTE
இந்த சிறப்பு பண்டிகை கால விற்பனையில் கிடைக்கும் மிகவும் மலிவான விலை ஸ்மார்ட்போன் மாடல் என்றால், அது இந்த Tecno Pop 5 LTE மாடல் மட்டும் தான். இது ரூ.5,000 விலை வரம்பில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் மூலம் வெறும் ரூ. 6,199 விலையில் கிடைக்கிறது.
3. Tecno Spark 9
இவ்வளவு குறைவான விலையில், இவ்வளவு அதிக ரேம் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் இப்போது இந்தியாவில் பார்க்கவே முடியாது. இந்த Tecno Spark 9 சாதனம் 11ஜிபி வரையிலான ரேம் அம்சத்தை வெறும் ரூ. 11,499 என்ற அசல் விலையில் வழங்குகிறது. இதை இன்னும் குறைந்த விலையில் வாங்க நினைத்தால், நீங்கள் ரூ. 7,999 என்ற சலுகை விலையில் வாங்கலாம்.
4. Tecno POVA 3
இதற்கு முன் நாம் பார்த்த ஒட்டுமொத்த மாடல்களில் கிடைக்கும் அம்சங்கள் அனைத்தையும் இந்த Tecno POVA 3 பேக் செய்கிறது. 11ஜிபி ரேம், 7000mah பேட்டரி, 50MP ட்ரிபிள் ரியர் கேமரா என்று ஒரு பவர்புல் போனாக இது இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 12,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 14,999 மட்டுமே. அடுத்த 6 நாட்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
5. Tecno Camon 18
டிரெண்டிங்காக ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த மாடலை தேர்வு செய்யலாம். அட்டகாசமான வடிவமைப்பு, சிறப்பான அம்சங்கள், கவர்ந்திழுக்கும் கலர் என்று எல்லாமே இதில் ஈர்க்கும் விதத்தில் மிகவும் பெஸ்டாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 17,999 ஆகும். இப்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இதை வெறும் ரூ. 13,499 விலையில் வாங்கலாம்.
6. Tecno Camon 19 Neo
இந்த ஆண்டின் சிறந்த டிசைன் ஸ்மார்ட்போன் விருதை இந்த Tecno Camon 19 Neo வென்றுள்ளது. இது 11ஜிபி ரேம், சூப்பர் நைட் மோட் போட்டோ ட்ரிபிள் கேமரா, எக்ஸ்டரா ஸ்டோரேஜ் என்று இதில் பல அம்சங்கள் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. இதன் அசல் விலை ரூ. 18,499 என்றாலும் கூட, இப்போது இதை நாம் வெறும் ரூ. 14,999 என்ற விலையில் வாங்கிட முடியும்.
7. Tecno POVA 5G
இப்போது எல்லோரின் கவனமும் 5ஜி போன்கள் மீது தான் இருக்கிறது, அப்படி உங்கள் கவனமும் 5ஜி டிவைஸ் மீது இருக்கிறது என்றாலோ அல்லது பட்ஜெட் விலையில் ஒரு பெஸ்டான 5ஜி போனை நீங்கள் வாங்க விருப்பினாலோ, உங்கள் சாய்ஸ் இந்த Tecno POVA 5G போனாக தான் இருக்க வேண்டும். இந்த டிவைஸ் இந்தியாவில் ரூ. 28,999 என்ற அசல் விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இன்று கிடைக்கும் சலுகையின் மூலம் ரூ. 13,500 விலை குறைக்கப்பட்டு, இப்போது வெறும் ரூ. 15,499 விலையில் வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
8. Tecno Camon 19 Pro Mondrian
நீங்கள் மிகவும் யூனிக் ஆனா நபர் என்றால், இந்த மாடலை கட்டாயம் நீங்கள் ஒரு முறை பார்க்க வேண்டும். பட்ஜெட் விலையில் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களையோ அல்லது ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போனையோ வாங்க நினைப்பவர்கள் இந்த போனை தவறவிடக் கூடாது. சூப்பர் கூல் வடிவமைப்புடன், அட்டகாசமான அம்சங்களுடன் இது ரூ. 24,999 என்ற அசல் விலையில் அமேசான் இல் கிடைக்கிறது. ஆனால், சலுகையுடன் வெறும் ரூ. 17,999 விலையில் அடுத்த 6 நாட்களுக்கு வாங்கக் கிடைக்கிறது.
9. Tecno Phantom X
கர்வுட் AMOLED டிஸ்பிளே, 13 ஜிபி ரேம், 108MP + 50MP + 8MP + 13MP குவாட் கேமரா என்று எல்லாமே இதில் பிரீமியம் தரத்தில் இருக்கிறது. பட்ஜெட் விலையில் ஒரு தரமான பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர் நீங்கள் என்றால், உங்கள் சாய்ஸ் இந்த Tecno Phantom X மாடலாக தான் இருக்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 32,999 ஆகும். இன்றைய சலுகையுடன் இதை நீங்கள் வெறும் ரூ. 25,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த மாடல்கள் எல்லாம் இப்போது சலுகை விலையில் கிடைக்கின்றன. இந்த சலுகை விலையை நீங்கள் இன்னும் கணிசமாக குறைக்க விரும்பினால், இத்துடன் கிடைக்கும் 22-க்கும் மேற்பட்ட வங்கிகளுடைய சலுகைகளை பயன்படுத்தி, இந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை நீங்கள் குறைக்கலாம். அல்லது உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்தும், இவற்றின் விலையை நீங்கள் இன்னும் பல மடங்கு அதிகமாக குறைக்க முடியும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications