4-இல் 1-ஐ தூக்குங்க.. ரூ.12000 டிஸ்கவுண்ட்.. ரூ.5000 விலை குறைப்பு.. Google Pixel 10 சீரீஸ் மீது பலே ஆபர்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் கூகுள் பிக்சல் டேஸ் (Google Pixel Days) என்கிற பேனரின் கீழ் கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிக்சல் 10 சீரிஸின் (Pixel 10 Series) கீழ் அறிமுகமான 4 மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைப்பதாக பட்டியலிட்டுள்ளது.
என்னென்ன மாடல்கள்?
- கூகுள் பிக்சல் 10 (Pixel 10)
- கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro)
- கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL)
- கூகுள் பிக்சல் 10ஏ (Pixel 10a)

பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 10 மீது கிடைக்கும் சலுகைகள்: இது அறிமுக விலையான ரூ.79,999 க்கு பதிலாக ரூ.5000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.7000 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்டும் கிடைக்கிறது.
பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் ப்ரோ எக்ஸ்எல் மீது கிடைக்கும் சலுகைகள்: பிக்சல் 10 ப்ரோ மாடல் ஆனது அறிமுக விலையான ரூ.1,09,999 க்கும், பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆனது அறிமுக விலையான ரூ.1,24,999 க்கும் தான் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு மாடல்களின் மீதும் ரூ.12000 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்டும் கிடைக்கிறது.
பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 10ஏ மீது கிடைக்கும் சலுகை: இதுவும் அதன் அறிமுக விலையான ரூ.44,999 க்கு தான் பட்டியலிடப்பட்டுள்ளது ஆனால் ரூ.2500 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்டின் கீழ் வாங் கிடைக்கிறது. மேற்கண்ட ஆபர் விலைகள் உங்களை ஈர்க்கக்கூடியதாக இருந்தால், உடனே பிளிப்கார்ட் வழியாக ஆர்டர் போடலாம்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டம் (Material You Expressive design system)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபை, என்எப்சி. யுஎஸ்பி டைப்-சி.


Click it and Unblock the Notifications