Amazon-ல் பட்டைய கிளப்பும் Pixel போன்.. ரூ.4000 விலை குறைப்பு + ரூ.2200 பேங்க் டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில், கூகுளின் லேட்டஸ்ட் போல்ட் மாடல் உட்பட அனைத்து கூகுள் பிக்சல் 10 சீரீஸ் (Google Pixel 10 Series) ஸ்மார்ட்போன்கள் மீதும் ஆபர் கிடைக்கும் மறுகையில், சற்றே பழைய கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) மாடல் மீது தான் ஒப்பீட்டளவில் நேரடி விலை குறைப்பு + நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது அமேசான் இந்தியாவில் ரூ.4000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.45,950 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடவே ரூ.2297 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்டும் கிடைக்கிறது.

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Google Pixel 9a Specifications):
- ஐரிஸ், அப்சிடியன் மற்றும் போர்சிலேன் ஆகிய 3 கலர் ஆப்ஷன்கள்
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்
- டூயல் சிம் (நானோ+இசிம்)
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Gorilla Glass 3 Protection)
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- ரியர் கேமராவை பயன்படுத்தி 4K/60fps வரை ரெக்கார்டிங் (இது 5x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது)
- செல்பீ கேமராவில் 4K/30fps வீடியோ ரெக்கார்டிங்
- ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ ஃபோகஸ் வீடியோ, சினிமாடிக் பான், ஸ்லோ-மோ (240fps), டைம்லேப்ஸ் ஸ்டெபிலைசேஷன், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி டைம்லேப்ஸ், நைட் சைட் டைம்லேப்ஸ், ஆப்டிகல் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஃபியூஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் சினிமாடிக் பான் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகிய வீடியோ அம்சங்கள்
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு


Click it and Unblock the Notifications