மொத்தமா ஒரு கும்பிடு.. ரூ.68,000 விலை குறைப்பு.. இதைவிட ஒரு போனுக்கு வராதுங்க.. மட்ட ரேட்ல Pixel ஸ்மார்ட்போன்!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையில் எந்தொரு போனுக்கும் கிடைக்காத தள்ளுபடி விலையில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்டு (Google Pixel 9 Pro Fold) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், சோனி சென்சார் கேமரா, 4650mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் அல்ட்ரா பிரீமியம் காட்டுகிறது. இந்த பிக்சல் 9 ப்ரோ போல்டு ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.1,72,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.58,000 நேரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,14,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு போக ரூ.10,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.1,04,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இது மொத்தமாக ரூ.68,000 விலை குறைப்பில் வாங்குவதாக இருக்கிறது. ஒரு பிக்சல் ஸ்மார்ட்போனுக்கு இது அதிகப்படியான டிஸ்கவுண்ட்டாக இருக்கிறது. இந்த உடனடி பேங்க் டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம். இப்போது பீச்சர்களை பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்டு அம்சங்கள் (Google Pixel 9 Pro Fold Specifications): இந்த போல்டு ஸ்மார்ட்போனில் கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல், 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் பீச்சர் டிராப் அப்டேட் கிடைக்கிறது.
8 இன்ச் (2076 x 2152 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த சூப்பர் ஆக்டுவா ஃப்ளெக்ஸ் (Super Actua Flex) டிஸ்பிளேவுக்கு கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் மற்றும் 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா-தின் கிளாஸ் (Ultra-thin Glass) புரொடெக்சன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 373 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

இதுபோக எச்டிஆர், 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) கவர் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஆக்டுவா ஓஎல்இடி டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 422 பிபிஐ பிக்டல் டென்சிட்டி மற்றும் 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டல் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கிடைக்கிறது.
இந்த கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்டு ஸ்மார்ட்போனில் 48 எம்பி மெயின் கேமரா + 10.5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்787 (Sony IMX787) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி உள்ளது. டெலிபோட்டோவில் சாம்சங் 3ஜே1 சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது.
மேலும், 20X டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. மேக்ரோ போகஸ், நைட் சைட், ஆட் மீ போன்ற பிரீமியமான கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. 10.5 செல்பீ கேமரா கிடைக்கிறது. 4650mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங + வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. IPX8 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications