என்ன இப்படி இறங்கிடானுங்க.. ரூ.32,000 விலை குறைக்கப்பட்ட Google Pixel போன்.. Flipkart இல்!
கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 10 சீரிஸின் (Pixel 10 Series) அறிமுகத்தை தொடர்ந்து பிளிப்கார்ட் பிக் பில்லியன்ஸ் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையில் பழைய பிக்சல் 9 (Pixel 9) மாடலின் மீது பெரிய அளவிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் வலைதளத்தில் உள்ள பேனரின்படி பிக்சல் 9 மீது "பிளாக்ஷிப் டீல் ஆப் தி இயர்" (Flagship Deal of the Year) கிடக்கிறது. அதாவது பிளாக்ஷிப் பிரிவின் கீழ் 2025 ஆம் ஆண்டில் கிடைக்கும் மிகப்பெரிய டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதன்கீழ் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் எம்ஆர்பி ஆன ரூ.79,999 க்கு பதிலாக ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது ரூ.32,000 விலை குறைப்பை பெறுகிறது.

கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 60 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் ஆக்சுவா ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோ-ப்ராசசர் (Titan M2 Security Coprocessor) உடன் டென்சர் ஜி4 சிப்செட் (Tensor G4 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டு உள்ளது.
அதில் 50 மெகாபிக்சல் ஆக்டா பிடி வைட் ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8 எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம்) ப்ரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது
முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டு உள்ளது.
மேலும் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4கே வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும். பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி (NFC), கூகுள் கேஸ்ட் (Google Cast), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் (Dual Band GNSS), பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் உள்ளன. கடைசியாக கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ+ இசிம்) ஆதரவு உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications