பலே பிளிப்கார்ட்.. ரூ.2000 விலை குறைப்பு + ரூ.2375 பேங்க் தள்ளுபடி.. 48MP கேமரா, 5100mAh பேட்டரி பிக்சல் போன்!
கூகுள் பிக்சல் 11 சீரிஸ் (Google Pixel 11 Series) ஸ்மார்ட்போன்கள் 2026 ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய வெளியீட்டு முறைகளை பின்பற்றினால், புதிய பிக்சல் 11 சீரீஸ் மாடல்கள் ஆனது 2026 செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதி முதல் பிற்பகுதிக்குள் விற்பனைக்கு வரும் என்றும்.
இந்த சீரீஸின் கீழ் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஆகிய 4 மாடல்கள் அறிமுகம் ஆனாலும் பலரும், இந்த சீரிஸின் அறிமுகத்தை தொடர்ந்து வரும் பிக்சல் 11ஏ அறிமுகத்தின் மீது தான் கண் வைத்துள்ளனர். ஏனென்றால் இதுதான் இந்த சீரீஸின் மிகவும் மலிவான மாடலாக இருக்கும்,. அதாவது பிக்சல் 10 சீரீஸின் கீழ் வந்த பிக்சல் 10ஏ மாடலை போல!

சுவாரசியமாக பிக்சல் 10ஏ மாடல் ஆனது தற்போது இன்னும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.2000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது
கூடுதலாக பிளிப்கார்ட் ஆக்சிஸ் மற்றும் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2375 கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 கேஷ்பேக் கிடைக்கிறது. பீம் யுபிஐ ஆப் வழியாக பணம் செலுத்தினால் ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள்:
- 6.3-இன்ச் ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- டென்சர் ஜி4 சிப்செட்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் (எப்/1.7) ப்ரைமரி ஷூட்டர் (25மிமீ போக்கல் லெங்த், 1/2.0-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் - OIS)
- 13 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா (120-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் 1/3.1-இன்ச் சென்சார்)
- 13 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- 5100mAh பேட்டரி
- 30W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (7 வருட ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்) -
- அளவீட்டில் 153.9x73x9மிமீ
- எடையில் சுமார் 183 கிராம்
இப்போதும் கூட பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 5 காரணங்கள்:
1. பிரகாசமான டிஸ்பிளே
2. பெட்டர் ஆன கேமராக்கள்
3. ஒன்றரை நாள் தாங்கும் நல்ல பேட்டரி லைஃப்
4. வாட்டர் ப்ரூப்
5. அழகழகான கலர் ஆப்ஷன்கள்
பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்க காரணங்கள்:
1. டிஸ்பிளே பிரைட் ஆக இருந்தாலும், பெஸல் பெரியதாக உள்ளன
2. கிட்டத்தட்ட பிக்சல் 9ஏ மாடலை போலவே உள்ளது
3. ஸ்லோவான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
4. கேமரா செட்டப்பில் டெலிஃபோட்டோ லென்ஸ் இல்லை


Click it and Unblock the Notifications