இதோ வந்துட்டேன்.. ரூ.5000 விலை குறைப்பு + ரூ.4000 வங்கி தள்ளுபடி.. அடிமட்ட விலைக்கு Google Pixel போன்!
பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் சாசா லேலே 2026 (Flipkart SASA LELE 2026 Sale) இல், கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆன பிக்சல் 10 சீரீஸ் (Pixel 10 Series) மீதான சலுகைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிக்சல் 10ஏ (Google Pixel 10a) மாடலின் மீதான பேங்க் டிஸ்கவுண்ட்டை தொடர்ந்து, தற்போது பிக்சல் 10 (Google Pixel 10) மாடலின் மீதான நேரடி விலைக்குறைப்பு கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆகஸ்ட் 2025 இல் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் நடக்கும் சிறப்பு விற்பனையின் கீழ், ரூ.5000 விலை குறைக்கப்பட்டு ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கூடுதலாக ரூ.4000 வரையிலான எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பேங்க் டிஸ்கவுண்ட்டும் (HDFC Bank Credit Card Discount) கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் ஆனது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், எது பெஸ்ட் டீல் (Best Deal) என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அப்போதே ஆர்டர் போட்டு விடவும்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் புல் எச்டி பிளஸ் ஓஎல்இடி சூப்பர் ஆக்சுவா டிஸ்பிளே
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் உடனான இன்-ஹவுஸ் டென்சர் ஜி5 சிப்செட்
- 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா
- பில்ட்-இன் க்யூஐ 2 சார்ஜிங் மேக்னட்கள்
- பிக்சல் ஸ்னாப் மேக்நட் சார்ஜிங் அக்ஸசெரீஸ்கள் உடனான இணக்கம்
- 4,970எம்ஏஎச் பேட்டரி
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டமை (Material You Expressive design system) வழங்குகிறது
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- வெப்ப மேலாண்மைக்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபை, என்எப்சி
- யூஎஸ்பி டைப்-சி ஆதரவு


Click it and Unblock the Notifications