அமேசானுக்கு விட்றா வண்டிய.. ரூ.13000 தள்ளுபடி.. 48MP கேம், 12GB ரேம், 4970mAh பேட்டரி புது Google Pixel போன்!
அடுத்த சில மாதங்களில் கூகுள் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11) அறிமுகமாக உள்ள நிலையில், தற்போதைய பிளாக்ஷிப் மாடலான கூகுள் பிக்சல் 10-க்கு (Google Pixel 10) மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. இன்னும் சரியாக சொல்லப்போனால் ரூ.13,939 தள்ளுபடி கிடைக்கிறது.
இந்த தள்ளுபடி அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் கிடைக்கிறது. இதற்காக நீங்கள் எந்தவொரு வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் காட்டையே பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுவொரு நேரடி தள்ளுபடி ஆகும். இதோடு சேர்த்து கூடுதலாக சில யுபிஐ பேமண்ட், நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் இதர ஆபர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதை பயன்படுத்தினால் இன்னும் விலை குறைக்க முடியும்.

நினைவூட்டும் வண்ணம் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.79,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது. ஆனால் தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.66,066 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இது ரூ.13,939 நேரடி விலை குறைப்பு அல்லது நேரடி டிஸ்கவுண்ட்டை குறிக்கிறது.
இந்த விலை அடிக்கடி மாறும் அல்லது எப்போது வேண்டுமானாலும் மாறலாம் - ஆன்லைன், இகாமர்ஸ் தளங்களில் இது வழக்கம் தான். இன்னும் சொல்ல போனால், இதே பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.5000 நேரடி விலை குறைப்பாகும்.
இதோடு சேர்த்து பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் மீது ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பெற உங்களிடம் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு இருக்க வேண்டும். ஒருவேளை உங்களிடம் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு இருந்தால் உங்களுக்கு ரூ.3750 டிஸ்கவுண்ட் கிடைக்கும். எப்படி பார்த்தாலும் இது அமேசானின் ஆபரை விட குறைவான லாபத்தைதே வழங்கும்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டம் (Material You Expressive design system)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபை, என்எப்சி. யுஎஸ்பி டைப்-சி.


Click it and Unblock the Notifications