ஆர்டருக்கு மேல ஆர்டர்.. Pixel போனுக்கு ரூ.5,000 விலை குறைப்பு.. ரூ.4,000 பேங்க் தள்ளுபடி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மிட்-பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போனுக்கு ஒரே நேரத்தில் விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, அடிமட்ட விலைக்கு இந்த பிக்சல் 10 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 2 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆக இருக்கிறது. ஆனால், இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட போது, ரூ.79,999 விலைக்கு வந்தது. ஆகவே, நேரடியாக மார்கெட் விலையில் இருந்து ரூ.5,000 குறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விலை குறைப்பு போக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைத்துள்ளது. ஆகவே, ரூ.9,000 தள்ளுபடி விலைக்கு இப்போது, கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.70,999 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. பிரீமியம் பீச்சர்களையும் பெறலாம்.
ஏனென்றால், 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மட்டுமல்லாமல், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டைட்டன் எம்2 செக்யூகிட்டி சிப், இமேஜிங் சிக்னல் ப்ராசஸர் (Imaging Signal Processor) கொடுக்கப்பட்டு உள்ளது.
கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட கூகுள் டென்சார் ஜி5 3என்எம் (Google Tensor G5 3nm) சிப்செட்டை இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. முன்போ சொன்னதை போல டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப்செட் கிடைக்கிறது.
நானோ சிம் + ஈசிம் சப்போர்ட் கொடுத்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சனுடன் 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.
மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஓடிடி பிரியர்களுக்காக எச்டிஆர் (HDR) சப்போர்ட் கிடைக்கிறது. சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சாருடன் 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் ஓஐஎஸ் சப்போர்ட் உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சார், 120 டிகிரி வைடு ஆங்கிள் கொண்ட 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
இதில் மேக்ரோ ஆப்ஷனும் கிடைக்கிறது. சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சார், 20X சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் எப்/3.1 அர்பெர்சர் கொண்ட 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மேலும், 120X டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. சினிமாடிக் பிளர் (Cinematic Blur), மேஜிக் கியூ (Magic Cue) உள்ளது.
மேலும், ஆட்டோ பெஸ்ட் டேக் (Auto Best Take) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், பிக்சல் ஜெர்னல் ஆப் (Pixel Journal App) உள்ளிட்ட பிரத்யேக ஆப்களும் கிடைக்கின்றன. பிரீமியம் லுக்கில் அப்சிடியன் (Obsidian), ப்ரோஸ்ட் (Frost), லென்கிராஸ் (Lemongrass) மற்றும் இன்டிகோ (Indigo) ஆகிய கலர்களில் இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications