அட்ரா சக்கை.. தரமான ஆபர் விலையில் லேட்டஸ்ட் Google Pixel 5ஜி போன்.. 48MP OIS கேமரா, IP68, 5100mAh பேட்டரி!
கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அப்பர்-மிட் ரேன்ஞ் ஸ்மார்ட்போனாக, கடந்த பிப்ரவரி 2026 இல் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 10ஏ (Pixel 10a) மாடல், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா ஆகிய இரண்டு இ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. எது அதிக தள்ளுபடியை வழங்குகிறது?
பிக்சல் 10ஏ மீதான பிளிப்கார்ட் ஆபர்: பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் 3 வெவ்வேறு கலர் ஆப்ஷன்கள், வெவ்வேறு ஆபர் விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. லேவண்டர், 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: அறிமுக விலையான ரூ.49,999 க்கு பதிலாக 5% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.47,739 க்கு வாங்க கிடைக்கிறது.

அப்சிடியன், 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: அறிமுக விலையான ரூ.49,999 க்கு பதிலாக 4% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.47,800 க்கு வாங்க கிடைக்கிறது. ஃபாக், 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: அறிமுக விலையான ரூ.49,999 க்கு பதிலாக 2% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.48,869 க்கு வாங்க கிடைக்கிறது.
மேலும் மேற்கண்ட 3 கலர் ஆப்ஷன்களுமே ரூ.1400 வரையிலான அமேசான் பே கேஷ்பேக் ஆபர் உடன் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க முடியும். குறிப்பிடத்தக்க வண்ணம் இந்த 3 மாடல்களின் விலைகளும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பதால், இது நல்ல டிஸ்கவுண்ட் என்று உங்களுக்கு தோன்றும் விலை வரும் போது, உடனே ஆர்டர் போடவும்.
பிக்சல் 10ஏ மீதான அமேசான் இந்தியா ஆபர்: அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் மீது நேரடி தள்ளுபடியோ அல்லது நேரடி விலை குறைப்போ கிடைக்கவில்லை. ஆனால் ரூ.4400 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.49,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ள பிக்சல் 10ஏ மாடலை ரூ.45599 க்கு வாங்க முடியும். இது ஒப்பீட்டளவில் பிளிப்கார்ட் டீலை விட சிறந்தது ஆகும்.
கூகுள் பிக்சல் 10ஏ முக்கிய அம்சங்கள்:
- லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (7 வருட ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்)
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- டென்சர் ஜி4 சிப்செட்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் (f/1.7) ப்ரைமரி ஷூட்டர் (25மிமீ போக்கல் லெங்த், 1/2.0-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் - OIS)
- 13 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா (120-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் 1/3.1-இன்ச் சென்சார்)
- 13 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- 5100mAh பேட்டரி
- 30W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- அளவீட்டில் 153.9x73x9மிமீ
- எடையில் சுமார் 183 கிராம்
நம்பி வாங்க 5 நல்ல காரணங்கள்: 1. பிரகாசமான டிஸ்பிளே 2. பெட்டர் ஆன கேமராக்கள் 3. ஒன்றரை நாள் தாங்கும் நல்ல பேட்டரி லைஃப் 4. வாட்டர் ப்ரூப் 5. அழகழகான கலர் ஆப்ஷன்கள்.
வாங்காமல் தவிர்க்க 4 நியாயாமான காரணங்கள்: 1. டிஸ்பிளே பிரைட் ஆக இருந்தாலும், பெஸல் பெரியதாக உள்ளன 2. கிட்டத்தட்ட பிக்சல் 9ஏ மாடலை போலவே உள்ளது 3. ஸ்லோவான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் 4. கேமரா செட்டப்பில் டெலிஃபோட்டோ லென்ஸ் இல்லை


Click it and Unblock the Notifications