Home
Deal of the day

நீ படிச்ச ஸ்கூல்ல நான் டீச்சரு.. 7000mAh பேட்டரி Realme 5ஜி போன் உட்பட 5 மாடல்களின் விலைகளை சரித்த Flipkart!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது அதன் கிரேட் சம்மர் சேல்-ன் கீழ் ஐந்து பிரபலமான ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் விற்கும் மறுகையில்.. "அப்போ நாங்கல்லாம் என்ன தக்காளி தொக்கா?" என்று கேட்கும்படியாக பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது ஐந்து ரியல்மி போன்கள் மீது முரட்டு டிஸ்கவுண்ட்களை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் சாசா லேலே 2026 (Flipkart SASA LELE 2026) என்கிற சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் கீழ், பல்வேறு விலைப்பிரிவுகளில் உள்ள பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு - தள்ளுபடிகளும் (Discounts), வங்கி சலுகைகளும் (Bank Offers) அறிவிக்கப்பட்டு உள்ளன.

7000mAh பேட்டரி Realme 5ஜி போன் உட்பட 5 மாடல்களின் விலைகளை சரிவு!

இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் அதன் 8 ஆம் ஆண்டு விழாவின் (Realme 8th Anniversary) ஒரு பகுதியாக, அதே பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஒரே சீரீஸின் கீழ் 5 ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:

1. ரியல்மி பி4 ப்ரோ (Realme P4 Pro): பிளிப்கார்ட் வலைதளத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.28,999 க்கு பதிலாக ரூ.24,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.
2. ரியல்மி பி4 ப்ரோ (Realme P4 Lite): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.13,499 க்கு பதிலாக ரூ.12,749 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

3. ரியல்மி பி4 பவர் (Realme P4 Power): பிளிப்கார்ட் வலைதளத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.27,999 க்கு பதிலாக ரூ.23,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.
4. ரியல்மி பி4 (Realme P4): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.20,999 க்கு பதிலாக ரூ.19,99 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

5. ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G): பிளிப்கார்ட் வலைதளத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். மேற்கண்ட விலைகள் எல்லாமே பேங்க், கூப்பன் ஆபர்களை உள்ளடக்கிய விலைகள் என்றும் பிளிப்கார்ட் குறிப்பிடுகிறது. '

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.8-இன்ச் எப்எச்டி பிளஸ் (1080 × 2800 பிக்சல்ஸ்) அமோஎல்இடி 4டி கர்வ் பிளஸ் டிஸ்பிளே
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- 12ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை யுஎப்எஸ் 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6 ஓஎஸ்
- ஏஐ ஆதரவு உடனான ஹைப்பர் விஷன் சிப்செட்
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக 7000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டம்
- ஏஐ லேண்ட்ஸ்கேப், ஏஐ ஸ்னாப் மோட், ஏஐ பார்ட்டி மோட் மற்றும் ஏஐ டெக்ஸ்ட் ஸ்கேனர் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள்

- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி IMX896 பிரைமரி சென்சார்
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் OV50D செல்பீ சென்சார்
- முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 60fps இல் 4K வீடியோ ரெக்கார்ட் ஆதரவு
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங்
- 7,000mAh பேட்டரி

- 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மற்றும் IP66 ரேட்டிங்
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 7.68 மிமீ தடிமன்
- எடையில் 187 கிராம்.

Best Mobiles in India

English summary
Flipkart SASA LELE Sale 2026 Best Deals on Realme P4 Series Including Realme P4 Pro 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X