Motorola மிரட்டுது! ரூ.7000 பட்ஜெட்ல புதுசா 7000mAh பேட்டரி வந்த வேகத்துல பழைய மாடல் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட்!
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் ஆக மோட்டோ ஜி06 பவர் 4ஜி (Moto G06 Power 4G) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart), மோட்டோ ஜி05 4ஜி (Moto G04 4G) ஸ்மார்ட்போனின் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பிளிப்கார்ட்டில், மோட்டோ ஜி04 4ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது எம்ஆர்பி ரூ.9,999 க்கு பதிலாக ரூ.3000 தள்ளுபடியை பெற்று ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் மோட்டோ ஜி04 4ஜி ஸ்மார்ட்போனின் பாரஸ்ட் க்ரீன் மற்றும் ப்ளம் ரெட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கிறது.

மோட்டோ ஜி05 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Moto G05 4G Specifications):
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.67-இன்ச் HD+ (720 x 1,612 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் சிப்செட்
- 50 மெகாபிக்சல் பிரைமரி ரியர் கேமரா
- முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்
- டால்பி அட்மோஸ் ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரி
7000எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய மோட்டோ ஜி06 பவர் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7499 க்கு அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில், அதே ஜி சீரிஸின் கீழ் உள்ள பழைய மோட்டோ ஜி05 மாடலின் விலை ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
புதிய மோட்டோ ஜி06 பவர் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பான்டோன் லாரல் ஓக், பான்டோன் டென்ட்ரில் மற்றும் பான்டோன் டேபஸ்ட்ரி ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா வலைத்தளம் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்.
புதிய மோட்டோ ஜி06 பவர் 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Moto G06 Power 4G Specifications):
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ
- 6.88-இன்ச் HD+ (720×1,640 பிக்சல்ஸ்) டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் [பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- மீடியா டெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கூகுளின் ஜெமினி ஏஐ அசிஸ்டென்ட் ஆதரவு
- தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- கம்பெனியின் 20W சார்ஜருடன் பயன்படுத்தப்படும்போது 18W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி
- இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 மணிநேரம் வரை பிளேபேக் டைம் கிடைக்கும்
- கடைசியாக இதன் எடை 220 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








