Home
Deal of the day

போட்றா வெடிய.. PRO மாடல்கள் மீதும் பலே PRICE CUT.. இது தெரிஞ்சா OFFER-ல iPhone 15, iPhone 16 வாங்க மாட்டீங்க!

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையின் போது ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 16 (iPhone 16) ஆகிய வெண்ணிலா வேரியண்ட்கள் மீது மட்டுமே பெரிய அளவிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தால்.. அது தவறு!

ஐபோன் 16 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட 2 ப்ரோ மாடல்கள் மீதும் கூட விலை குறைப்பு , ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் கிடைக்கும். வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro)மாடல் ஆனது ரூ.69,999 என்கிற தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றும், அதே நேரத்தில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல் ஆனது ரூ.89,999 க்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

iPhone: போட்றா வெடிய.. PRO மாடல்கள் மீதும் பலே PRICE CUT!

இதுபோன்ற "நம்ப முடியாத" பிளிப்கார்ட் டீல்கள் ஆனது விற்பனை நிகழ்வு தொடங்கிய சில மணிநேரங்களுக்குள் காலாவதியாகிவிடும் அல்லது விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும், நீண்ட நேரத்திற்கு ஒரே விலையில் இருக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே, உங்களுக்கான சரியான டிஸ்கவுண்ட் கிடைத்ததும் அதை உடனே ஆர்டர் செய்ய வேண்டும்.

ஐபோன் 16 மீதான டிஸ்கவுண்ட்: வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 விற்பனையின் போது ஐபோன் 16 மாடல் ஆனது ரூ. 51,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்பதை பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது அதன் மொபைல் ஆப்வழியாக உறுதிப்படுத்தியுள்ளது

இதுகுறித்த மைக்ரோசைட்டில் "நீங்கள் பார்ப்பதை தான் செலுத்த வேண்டும்" மற்றும் "விதிமுறைகள் பொருந்தாது" போன்ற டேக்லைன்களையும் கொண்டுள்ளது. ஆக ஐபோன் 16 மீதான இந்த விலைக்குறைப்பானது, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பெறக்கூடிய கூடுதல் வங்கி சலுகையாக இருக்காது; நேரடி விலைகுறைப்பாக இருக்கலாம்.

கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான போது ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.79,900 ஆக இருந்தது. பின்னர் ஐபோன் 17 அறிமுகத்திற்கு பிறகு அதே ​​128ஜிபி ஆப்ஷன், பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.74,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை செப்.23 தொடங்கி இன்னும் குறையும் என்பதால், இப்போதைக்கு யாரும் ஐபோன் 16 மாடலை வாங்க வேண்டாம். சிறிது நாட்கள் காத்திருக்கவும்.

ஐபோன் 14 மீதான ஆபர்: மேலும் பிளிப்கார்ட் மொபைல் ஆப் வழியாக ஐபோன் 14 மீது கிடைக்கும் ஆபரும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வங்கி தள்ளுபடியுடன் சேர்த்து ஆப்பிள் ஐபோன் 14 மாடல் ஆனது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும். தற்போது ​​128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 14 ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது. கடந்த செப்டம்பர் 2022 இல் இது ரூ.79,900 க்கு அறிமுமானது.

புதிய ஐபோன் 17 விலை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கும், ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 17-க்கான ப்ரீ-ஆர்டர் ஆனது கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தொடங்கியது. ஐபோன் 17 மாடலின் டெலிவரி / விற்பனை வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கும்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2025 iPhone 16 Pro and iPhone 16 Pro Max Discounted Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X