தெறிக்க விடும் தீபாவளி ஆபர்.. 6000mAh பேட்டரி, பேக் பேனல் LED லைட் உடன் வரும் இந்த 5ஜி போன் விலை குறைப்பு!
நத்திங் நிறுவனத்தின் கிளிஃப் இன்டர்பேஸ் டிசைனுக்கு (Glyph Interface Design) போட்டியாக.. அதே போல பேக் பேனலில் எல்இடி லைட் செட்டப் (Delta Interface) உடன்.. மிகவும் மலிவான விலைக்கு அறிமுகமான டெக்னோ போவா 7 5ஜி (Tecno Pova 7 5G) ஸ்மார்ட்போன் தற்போது குறைக்கப்பட்ட விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நடக்கும் பிக் பேங்க் தீபாவளி விற்பனை 2025 இன் ஒரு பகுதியாக டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கு பதிலாக ரூ.500 விலை குறைப்பை பெற்று ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீதும் ஆபர் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,499 க்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் வழியிலான கார்டு டிஸ்கவுன்ட்டிற்கு பின்னர் ரூ.16,149 க்கு வாங்க கிடைக்கும் என்று பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
டெக்னோ போவா 7 5ஜி, டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: இரண்டுமே மீடியாடெக்கின் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட்டால் இயக்கப்படுகின்றன மற்றும் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரிகளை கொண்டுள்ளன.
இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் தனித்துவமான விற்பனை புள்ளி ஒன்றும் உள்ளது. இவ்விரு மாடல்களுமே பேக் பேனலில் வைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மல்டி-ஃபங்க்ஸ்னல் டெல்டா லைட் இன்டர்பேஸை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் டெக்னோவின் எல்லா ஏஐ (Ella AI) உடன் வருகின்றன.
டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விரிவான அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் 6.78-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே (144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது
- ஸ்டாண்டர்ட் மாடலில் 6.78-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்டிபிஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்) உள்ளது.
- இரண்டுமே 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் 256ஜிபி வரை யுஎப்எஸ் 2.2 ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகின்றன.
- ப்ரோ வேரியண்ட் 8ஜிபி எல்பிடிடிஆர்5 ரேம்-ஐ ஆதரிக்கும் அதே வேளையில், வெண்ணிலா மாடல் எல்பிடிடிஆர்4 ரேம் உடன் வருகிறது
- இரண்டுமே ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைஓஎஸ் 15 உடன் வருகின்றன
- தமிழ், இந்தி, மராத்தி மற்றும் பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் எல்லா ஏஐ சாட்போட் ஆதரவையும் கொண்டுள்ளன
- குறைந்த நெட்வொர்க் மற்றும் தொலைதூர பகுதிகளில் கனெக்டிவிட்டியை மேம்படுத்தும் 4x4 மிமோ ஆதரவையும் கொண்டுள்ளன
- வோவைஃபை டூயல் பாஸ் அம்சமும் உள்ளது, இது சிம் 1 ஆக்டிவ் ஆக இருக்கும்போது சிம் 2-வில் கால் வெயிட்டிங் அலெர்ட்-ஐ பெற அனுமதிக்கிறது.
- வெண்ணிலா மாடலில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் ஒரு லைட் சென்சார்
- ப்ரோ மாடலில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்682 ப்ரைமரி சென்சார் + 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- இரண்டு ஸ்மார்ட்போன்களும் 13 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளன
- இரண்டுமே 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளன
- ப்ரோ மாடலில் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் கிடைக்கும்
- ரியர் கேமரா யூனிட்களை சுற்றி வைக்கப்பட்டுள்ள புதிய டெல்டா லைட் இன்டர்பேஸ் ஆனது ம்யூசிக், நோட்டிபிகேஷன்கள், வால்யூம் மற்றும் சார்ஜிங்கிற்கு எதிர்வினையாற்றும் 104 மினி எல்இடி லைட்களை உள்ளடக்கியுள்ளது


Click it and Unblock the Notifications








