அடடா.! இப்படி எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் புது OnePlus போன் வாங்கலாமா? சூப்பர்ல.!

இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிக செலவு இல்லாமல், புதிதாக ஒரு OnePlus ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் ரெடியா? எப்போதுமே, நாம் ஒரு புது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால், குறைந்தது ரூ.20,000-திற்கு மேல் செலவு செய்ய வேண்டியதுள்ளது.

அப்படி, செலவு செய்தால் தான், சிறந்த அம்சங்களுடன் வெளிவந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்களை (Latest Smartphone Models) நம்மால் வாங்க முடியும். லேட்டஸ்ட் மாடல்களை எப்போதும் நீங்கள் முழு தொகை கொடுத்து வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதில்லை என்பதே மகிழ்ச்சியான செய்தி.

அடடா.! இப்படி எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் OnePlus போன் வாங்கலாமா?

காரணம், எப்போதும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது பல சலுகைகளை (Offers) வழங்குகிறது. நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால், புது ஸ்மார்ட்போன்கள் மீது நம்ப முடியாத வகையில் எக்ஸ்சேஞ் சலுகையும் (Exchange Offer) அறிவிக்கப்படுகிறது.

இது தான் நமக்கான சரியான டிரிக். உங்களிடம் இருக்கும் பழைய போனை கொடுத்து, சலுகையுடன் பல ஆயிரங்களைக் குறைத்து மிகவும் குறைந்த விலையில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

அப்படி, இப்போது அதிக எக்ஸ்சேஞ் சலுகையுடன் சேர்த்து, தள்ளுபடியும் கிடைக்கும் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு உங்களை எப்படிச் சாமர்த்தியமாக அப்கிரேட் (Upgrade) செய்துகொள்ளப் போகிறோம் என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம். உங்களுக்கான பெஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். லிஸ்டை பாருங்க... உடனே லேட்டஸ்ட் போனிற்கு அப்கிரேட் ஆகிடுங்க..!

1. OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G (Blue Tide, 6GB RAM, 128GB Storage)
₹19,999.00

இப்போது பட்ஜெட் விலையில் உங்களுக்குக் கிடைக்கும் பெஸ்டான 5G ஒன்பிளஸ் மாடல் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 19,999 ஆக இருக்கிறது. இதன் மீது கிடைக்கும் சலுகையின் மூலம் ரூ. 18,999 விலைக்கு இதை வாங்கலாம். நீங்கள் சாமர்த்தியமாக இதன் விலையை இன்னும் குறைக்க விரும்பினால், உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்யுங்கள். இந்த போன் மீது ரூ. 18,000 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது. உங்கள் போன் மாடலை உள்ளிட்டு அதற்கான தொகை எவ்வளவு என்று உடனே செக் செய்யுங்கள்.

2. OnePlus Nord CE 2 5G

OnePlus Nord CE 2 5G (Gray Mirror, 6GB RAM, 128GB Storage)

OnePlus Nord வரிசையில் கிடைக்கும் புது 5G டிவைஸ் இதுவாகும். மிரட்டலான கேமரா, அட்டகாசமான லுக் என்று இதில் பெஸ்டான விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. இந்த போன் மீது ரூ. 22,000 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது. இது இப்போது சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 23,998 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகை இன்னும் 4 நாட்கள் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.7000 முதல் புது பிரிட்ஜ் வாங்கலாமா? சிங்கிள் டோர் Refrigerator வாங்கலாமா? வேண்டாமா?ரூ.7000 முதல் புது பிரிட்ஜ் வாங்கலாமா? சிங்கிள் டோர் Refrigerator வாங்கலாமா? வேண்டாமா?

3. OnePlus 10R 5G Prime Edition

OnePlus 10R 5G Prime Edition (Prime Blue, 8GB RAM, 128GB Storage, 80W SuperVOOC)
₹32,999.00
₹38,999.00
15%

அடடா...! வாங்குனா இப்படி ஒரு போனை தான் வாங்கணும். கைக்கு அடக்கம்.. செம ஸ்பெக்ஸ்.. சூப்பர் கூல் கலர்.. எல்லாமே உங்களை ரசிக்க வைக்கும் அம்சத்துடன் இந்த OnePlus 10R 5G Prime Edition வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 38,999 என்றாலும் கூட, இப்போது இதை வெறும் ரூ. 32,999 விலையில் நாம் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ. 28,000 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது.

4. OnePlus Nord 2T 5G

OnePlus Nord 2T 5G (Gray Shadow, 12GB Storage, 256GB Storage)
₹33,999.00

இந்த சமீபத்திய OnePlus Nord 2T 5G மாடல் உண்மையிலேயே பெஸ்டான அம்சங்களைக் கொண்டு வருகிறது. உங்களுக்கு தேவையான பெஸ்ட் கேமரா, பெஸ்ட் சிப்செட், 5ஜி கனெக்டிவிட்டி போன்று எல்லாமே இதில் பெஸ்டாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீது உங்களுக்கு இப்போது ரூ. 25,000 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடி கிடைக்கிறது. உங்கள் பழைய மொபைலை கொடுத்து உடனே இந்த போனிற்கு அப்டேட் செய்யுங்கள். இதன் அசல் விலை ரூ. 33,999 மட்டுமே.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

5. OnePlus 9 Pro 5G

OnePlus 9 Pro 5G (Pine Green, 12GB RAM, 256GB Storage)
₹69,999.00

பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும், ஆனால், விலை தீயாய் இருக்கிறது என்று ஃபீல் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த OnePlus 9 Pro 5G மாடலை இப்போது ரூ. 54,999 என்ற சலுகை விலையில் வாங்கலாம். இந்த போன் மீது ரூ. 25,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. இந்த 2 சலுகையையும் பயன்படுத்துவதன் மூலம் பட்ஜெட் விலையில் உங்களால் ஒரு புது பிளாக்ஷிப் போனை சொந்தமாக்க முடியும்.

6. OnePlus 10 Pro 5G

OnePlus 10 Pro 5G (Emerald Forest, 12GB RAM, 256GB Storage)
₹71,999.00

லேட்டஸ்ட் பிளாக்ஷிப் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல் என்றால், அது இந்த OnePlus 10 Pro 5G மாடல் தான். இந்த போனை பற்றி சொல்லவே வேண்டாம், இதில் அவ்வளவு சிறப்புகள் இருக்கிறது. இந்த போன் மீது இப்போது 4 நாள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் விலை இப்போது ரூ. 66,999 ஆகக் குறைந்துள்ளது. இதன் அசல் விலை ரூ. 71,999 ஆக இருக்கிறது. எக்ஸ்சேஞ் சலுகையாக உங்களுக்கு ரூ. 35,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. உங்களிடம் பழைய பிளாக்ஷிப் போன் எதுவும் இருந்தால், தாராளமாக எக்ஸ்சேஞ் செய்து, மிகவும் குறைந்த விலையில் இந்த போனை வாங்குவது சிறந்த முடிவாகும்.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

OnePlus, Xiaomi, Samsung போன்ற முன்னணி பிராண்ட்களின் போன்களை எக்ஸ்சேஞ் செய்யும் போது அதிகப்படியான எக்ஸ்சேஞ் விலை கிடைக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

காலத்திற்கு ஏற்றார் போல, லேட்டஸ்ட் அம்சங்களுடன் உங்கள் போனை அப்கிரேட் செய்ய வேண்டும் என்றால் எப்போதும், எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்திக்கொள்ள தவறாதீர்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X