Home
Deal of the day

இந்த 3 விஷயத்தை பண்ணா போதும்.. Amazon-ல் iPhone 15-ஐ வெறும் ரூ.14390 க்கு வாங்கலாம்.. தீபாவளி ஆபர் முடியலங்கோ!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடந்த தீபாவளி சிறப்பு விற்பனை முடிந்து விட்டாலும் கூட, சில ஸ்மார்ட்போன்கள் மீது அறிவிக்கப்பட்ட தீபாவளி சலுகைகள் அப்படியே நீடிக்கின்றன. அந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 (iPhone 15) மாடலும் உள்ளது. 3 விஷயங்களை செய்வதன் மூலம் உங்களால் ஐபோன் 15 மாடலை வெறும் ரூ..14,390 க்கு வாங்க முடியும். அதெப்படி?

2023 ஆம் ஆண்டில் வெளியானதில் இருந்தே ஐபோன் 15 மீது அமேசான் வலைத்தளம் பல வகையான சலுகைகளை, தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. ஆனால் ஐபோன் 16 சீரீஸ் அறிமுகமான பின்னர் ஐபோன் 15 மீதான ஆபர்கள் இன்னும் பெரிதாகின. அந்த வரிசையில் தற்போது 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷனில் வரும் ஐபோன் 15 மீது அபாரமான தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 15-ஐ வெறும் ரூ.14390 க்கு வாங்கலாம்.. தீபாவளி ஆபர் முடியலங்கோ!

தற்போது அமேசான் வலைத்தளத்தில் ஐபோன் 15 (256 ஜிபி, கருப்பு) மாடலின் விற்பனை விலை ரூ.89,600 ஆக உள்ளது. இதை ரூ.14,390 க்கு வாங்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது - ஒன்றுமே இல்லை. அமேசான் வலைத்தளமே இந்த மாடல் மீது நேரடியாக 14% தள்ளுபடியை கொடுக்கிறது. இதன் மூலம் ஐபோன் 15 மாடலின் விலையை ரூ.77,490 ஆக குறைக்கலாம்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது - எக்ஸ்சேன்ஜ் ஆபரை பயன்படுத்த வேண்டும். இதன் கீழ் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய ஆனால் நல்ல நிலையில் உள்ள ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு ரூ.60,600 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். இப்படியாக ஐபோன் 15 மாடலின் விலையை ரூ.16,890 ஆக குறைக்கலாம்.

மூன்றாவதாக, ஐபோன் 15 மாடலை வாங்க நீங்கள் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். இதன் கீழ் உங்களுக்கு கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் 256ஜிபி [பிளாக் கலர் வேரியண்ட்டின் இறுதி ஆபர் விலையை ரூ.14,390 க்கு கொண்டுவர முடியும்.

ஐபோன் 14 பிளஸ் பயனர்களுக்கான இலவச சேவை (iPhone 14 Plus Free Service): ஆப்பிள் ஐபோன் தொடர்பான மற்ற முக்கிய செய்திகளை பொறுத்தவரை.. ஏப்ரல் 10, 2023 முதல் ஏப்ரல் 28, 2024 வரை தயாரிக்கப்பட்ட டிவைஸ்களை பாதித்த "ஒரு அரிதான வகை சிக்கலால்" பாதிக்கப்பட்ட ஐபோன் 14 பிளஸ் பயனர்களுக்கு இலவச சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் ஆனது உற்பத்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட டிவைஸ்களின் ரியர் பின்புற கேமராவை பயன்படுத்தும் போது, அதில் எந்த ப்ரீவியூவும் காண முடியவில்லை என்கிற புகார்கள் எழுந்ததன் விளைவாக, ஆப்பிள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உங்களிடம் இருக்கும் ஐபோன் 14 பிளஸ் இந்த இலவச பழுதுபார்ப்புக்கு தகுதியானதா? குறிப்பிட்ட கேமரா சிக்கலால் பாதிக்கப்பட்ட ஐபோன் 14 பிளஸ் பயனர்கள், ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கத்திற்கு சென்று தங்கள் டிவைஸின் ஐஎம்இஐ (IMEI) நம்பரை உள்ளிடுவதன் மூலம் இலவச பழுதுபார்ப்புக்கான தகுதியை சரிபார்க்கலாம். தகுதி இருந்தால், ஆப்பிள் நிறுவனம் உங்களுக்கான பழுதுபார்ப்புகளை இலவசமாக வழங்கும்.

ஒருவேளை இதே சிக்கலால் பாதிக்கப்பட்டு, தொடர்புடைய பழுதுபார்ப்புகளுக்கு நீங்கள் ஏற்கனவே செலவு செய்து இருந்தால், அந்த பணத்தைத் திரும்ப கோரும் வாய்ப்பும் ஐபோன் 14 பிளஸ் ஓனர்களுக்கு வழங்கப்படும். பயனர்கள் தங்கள் ஐபோன் 14 பிளஸ் மாடலை வாங்கிய தேதியிலிருந்து 3 ஆண்டுகள் வரை இந்த இலவச பழுதுபார்ப்புகளுக்கான உரிமையை கோரலாம் என்றும் ஆப்பிள் கூறியுள்ளது.

English summary
Even After Diwali Sale Amazon Selling iPhone 15 256 GB Variant At Unbelievable Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X