Home
Deal of the day

ஜன.19 குள்ள இந்த OnePlus போனை வாங்குனா செம்ம லாபம்.. ரூ.4000 டிஸ்கவுண்ட், ரூ.2500 ஆபர், ரூ.1300 நோ-காஸ்ட் EMI!

2025 அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனை (Amazon Republic Day Sale 205) முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஆனது ஜனவரி 19 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள், நல்ல ஆபர் விலையில் ஒரு தரமான ஸ்மார்ட்போனை வாங்கிவிட வேண்டும் என்கிற தேடலில் உள்ளீர்களா? உங்கள் பட்ஜெட் ரூ.30,000 க்குள் இருக்கிறதா?

ஆம் என்றால் கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கிறது - ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன். தற்போது இது மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை என்ன? அமேசானில் கிடைக்கும் ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ஜன.19 குள்ள இந்த OnePlus போனை வாங்குனா செம்ம லாபம்!

இந்தியாவில் அறிமுகமான போது ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 மாடலானது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.29,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12ஜிபி ரேம் + 256ஜிபி ரூ.35,999 க்கும் அறிமுகமாகி இருந்தது

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், மேற்கண்ட 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் 2 ஆப்ஷன்கள் (8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி) தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கு பதிலாக ரூ.4,000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.35,999 க்கு பதிலாக ரூ.4,000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது. நேரடி தள்ளுபடி தவிர்த்து ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் மீது ரூ.2500 எஸ்பிஐ பேங்க் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கிறது. கூடவே ரூ.1304 முதல் தொடங்கும் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தையும் அமேசான் வழங்குகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் மீதான இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து 3 கலர் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கிறது: அப்சிடியன் மிட்நைட் (Obsidian Midnight), மெர்குரியல் சில்வர் ( Mercurial Silver) மற்றும் ஒயாசிஸ் க்ரீன் (Oasis Green).

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

English summary
Do Not Miss This Deal on OnePlus Nord 4 5G in Amazon Republic Day Sale 2025 Ends January 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X