1 இல்ல 2 இல்ல.. 6 ஆப்ஷன் இருக்கு.. Amazon, Flipkart Sale இல் ரூ.10000 க்குள் என்கிற OFFER விலையில் 6 போன்கள்!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) ஆகிய 2 பண்டிகை கால சிறப்பு விற்பனைகளிலுமே மொபைல் போன்கள் மீது பலத்த ஆபர்களை காண முடிகிறது.
இந்த இரண்டு இ-காமர்ஸ் ஜாம்பவான்களின் பண்டிகை கால விற்பனை நிகழ்வுகளும் உங்கள் பாக்கெட்டில் ஓட்டை விழாமல் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் வாய்ப்புகளை வாரி வழங்குகின்றன. ஒருவேளை உங்களுடைய பட்ஜெட் ரூ.10000 க்குள் என்றால்.. நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டிய 6 ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 தளங்களில் - ஐக்யூ (iQOO), லாவா (Lava), ஒப்போ (Oppo), போக்கோ (Poco) மற்றும் ரெட்மி (Redmi) போன்ற பிராண்டுகளின் கீழ் ரூ. 10,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:
1. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கிறது
2. ரியல்மி நார்சோ 80 லைட் (Realme Narzo 80 Lite): இது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது
3. லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G): இது ரூ.13,499 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது
4. ஐக்யூ இஸட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G): இது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது
5. ஒப்போ கே13எக்ஸ் (Oppo K13x): இது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது
6. போக்கோ எம்7 பிளஸ் (Poco M7 Plus): இது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் அறிவித்துள்ள பண்டிகை கால விற்பனையின் (Samsung Fab Grab Fest) கீழ் கிடைக்கும் சலுகைகள்: தற்போது சாம்சங் தளங்களில் நேரலையில் உள்ள இந்த விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) 53 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.12,000 வரை வங்கி தள்ளுபடியையும் பெறலாம். இந்த சலுகைகள் - சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 7 (Galaxy Z Fold 7), சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Galaxy Z Flip 7), சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra), சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Galaxy S25), சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) மீது கிடைக்கிறது.
மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra), சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Galaxy S24), சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ (Galaxy S24 FE), சாம்சங் கேலக்ஸி ஏ56 (Galaxy A56), சாம்சங் கேலக்ஸி ஏ55 (Galaxy A55), சாம்சங் கேலக்ஸி ஏ36 (Galaxy A36), சாம்சங் கேலக்ஸி ஏ35 (Galaxy A35), சாம்சங் கேலக்ஸி ஏ26 (Galaxy A26), சாம்சங் கேலக்ஸி ஏ17 (Galaxy A17) ஆகிய மாடல்களின் மீதும் கிடைக்கும்.
ஷாவ்மீ பண்டிகை கால விற்பனையின் (Xiaomi Festive Sale 2025) கீழ் கிடைக்கும் சலுகைகள்:
1. ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G): இது ரூ.34,999க்கு பதிலாக ரூ.24,999க்கு வாங்க கிடைக்கும்.
2. ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G): இது ரூ.28,999க்கு பதிலாக ரூ.20,999க்கு வாங்க கிடைக்கும்.
3. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): இது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கும்.
4. ரெட்மி நோட் 14 எஸ்இ (Redmi Note 14 SE): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
5. ரெட்மி 15 (Redmi 15): இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.
6. ரெட்மி 14சி (Redmi 14C): இந்த ஸ்மார்ட்போன் அசல் விலையான ரூ.12,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications