வெளியான 6 மாசத்துல முழுசா ரூ.20,000 டிஸ்கவுண்ட்.. இந்த Motorola போனின் மீது Amazon-ன் அடேங்கப்பா ஆபர்!
இந்திய சந்தையில் 6 மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான (கடந்த 2024 ஜூலை மாதத்தில் அறிமுகமான) ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போன் தற்போது முழுதாக ரூ.20,000 தள்ளுபடியை பெற்று சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அது மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ஸ்மார்ட்போனாகும்.
தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில், மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் +512ஜிபி ஆப்ஷன் ஆனது, அசல் அறிமுக விலையான ரூ.99,999 க்கு பதிலாக ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது ரூ .20,000 நேரடி தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 413பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட4-இன்ச் எல்டிபிஓ பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது!
சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டில் இயங்குகிறது, இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் அவுட்டர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இருப்பினும் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் 68W சார்ஜரை அனுப்புகிறது.
ஒருவேளை நீங்கள் இதற்கு முந்தைய மாடல் ஆன மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா 5ஜி (Motorola razr 40 Ultra 5G) ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், அதுவும் அமேசான் இந்தியா வலைதளத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது இது 25% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.79,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி இன்னர் டிஸ்பிளே + 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 3.6-இன்ச் பிஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் ஆதரவுடன் 12 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ராவில் 30W வயர்டு மற்றும் 5வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 3800mAh பேட்டரியை பேக் செய்யப்பட்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications