5G போன் வாங்குனா "இந்த" போன்களை தான் வாங்கணும்.! பட்ஜெட்டில் பெஸ்ட் இதான்.!

புதிதாக 5ஜி போன் வாங்குகிற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் டிவைஸை எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால், இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் பெஸ்டான பட்ஜெட் பிரைஸ் 5G ஸ்மார்ட்போன் மாடல்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம். உடனே லிஸ்டை செக் செய்யுங்கள்.

5G போன் வாங்குனா

1. Samsung Galaxy M13 5G


கம்மி விலையில் 5ஜி நெட்வொர்க் சேவையுடன் இயங்கும் ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், கண்டிப்பாக நீங்கள் இந்த Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். இப்போது, சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான பிராண்டட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டுமே. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இன்றைய சலுகையில் இதை வெறும் ரூ. 11,999 விலையில் வாங்கலாம். எபக்ட்டிவ் சலுகையாக இந்த டிவைஸை நீங்கள் வெறும் ரூ. 10,799 விலையில் வாங்கலாம். எபக்டிவ் சலுகை என்பது வங்கி வழங்கும் சலுகைகள் மற்றும் பிற சலுகைகளை உள்ளடக்கியது.

2. Redmi 11 Prime 5G


லேட்டஸ்ட் 5ஜி நெட்வொர்க்கில் இயங்கும் பெஸ்டான பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இந்த Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். சலுகையுடன் இப்போது இதை நீங்கள் ரூ. 12,999 விலையில் வாங்கலாம். எபக்ட்டிவ் சலுகை விலையாக இந்த டிவைஸை ரூ. 10,999 என்ற விலையில் இன்னும் குறைவாக வாங்கலாம். இது வங்கி சலுகைகளுடன் உள்ளடக்கியது.

3. iQOO Z6 Lite 5G


தரமான டிஸ்பிளே உடன் பட்ஜெட் விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த iQOO Z6 Lite 5G மாடலை தாராளமாக வாங்கலாம். இப்போது இதன் சலுகை விலை ரூ. 13,999 ஆகும். வங்கி மற்றும் பிற சலுகைகள் சேர்த்து, எபக்டிவ் சலுகையாக இந்த டிவைஸை நீங்கள் வெறும் ரூ. 11,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும்.

4. Tecno POVA 5G


buட்ஜெட் செக்மென்ட்டில் சிறந்த அம்சங்களை வழங்கும் பிராண்டாக Tecno மாறி வருகிறது. Tecno POVA 5G இப்போது சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை வழங்குகிறது. இந்த சாதனத்தின் அசல் விலை ரூ. 28,999 மட்டுமே. இதன் மீது இப்போது 47% தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் இதன் விலை இப்போது ரூ. 15,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

5. realme narzo 50 5G


சக்தி வாய்ந்த சிப்செட் உடன் தரமான கேமரா அம்சத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த realme narzo 50 5G போன் ஒரு அற்புதமான சாய்ஸ். இதன் அசல் விலை ரூ. 18,999 என்றாலும் கூட, இன்றைய சலுகையின் மூலம் இதை வெறும் ரூ. 15,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. வங்கி சலுகைகளை சேர்த்து, எபக்டிவ் சலுகையாக இந்த போனை நீங்கள் இப்போது வெறும் ரூ. 13,749 என்ற பெஸ்ட் பிரைஸில் வாங்கலாம்.

6. Samsung Galaxy A22 5G


சாம்சங் பிராண்டில் இருந்து பட்ஜெட் விலையில் கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 23,999 என்றாலும் கூட, இன்று கிடைக்கும் சலுகையை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டால், வெறும் ரூ. 19,999 என்ற விலையில் வாங்கிடலாம். இதன் மீது எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ.18,500 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் எக்ஸ்சேஞ் சலுகையுடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களிடம் இருக்கும் பழைய 4ஜி ஸ்மார்ட்போனை கொடுத்து, முடிந்த வரை புதிய ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் அதிகமாகக் குறைக்க முடியும் என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள். எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம், மிகவும் சுலபமாக உங்களால் 5ஜி வட்டத்திற்குள் அப்கிரேட் செய்துகொள்ள முடியும்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X