Home
Deal of the day

4G வேணுமா.! இல்ல 5G வேணுமா? ரூ.6000 முதல் பெஸ்ட் Redmi போன்கள் வாங்கலாம் பாஸ்.!

தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனைகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கிவிட்டது. Amazon தளத்தில் கிடைத்த நம்ப முடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் எல்லாம் நிறைவடையப் போகிறது. இறுதிக் கட்ட சிறப்பு விற்பனையில் கிடைக்கும் பெஸ்டான ரெட்மி (Redmi) நிறுவனத்தின் 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியலைத் தான் இந்த பதிவில் உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

4G வேணுமா.! இல்ல 5G வேணுமா? ரூ.6000 முதல் பெஸ்ட் Redmi போன்கள்.!

ஆம், Redmi ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள், வங்கி சலுகைகள் மற்றும் எக்சேஞ் சலுகைகளைப் பற்றி தான் இதில் தெளிவாகப் பார்க்கப்போகிறோம். இந்த சலுகைகளை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டால், மிகக் குறைந்த விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க முடியும். உண்மையிலேயே புது போன் வாங்க மிகச் சரியான நேரம் இது தான். உடனே, இன்று கிடைக்கக்கூடிய சிறப்புத் தள்ளுபடி விபரங்கள் கீழே செக் செய்யுங்கள்.

முதலில் குறைந்த விலையில் கிடைக்கும் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை பார்க்கலாம்.

1. Redmi A1


ரெட்மி நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும். மிகக் குறைந்த விலையில் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் கிடைக்கும் இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் (Blockbuster Offer) மூலம், இதை நாம் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் வாங்கலாம். இதன் மெது 30% தள்ளுபடி கிடைக்கிறது.

2. Redmi 9 Activ


Redmi பிராண்டில் இருந்து மலிவு விலையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல் என்றால், அது இந்த Redmi 9 Activ ஸ்மார்ட்போன் சாதனம் மட்டும் தான். இதன் அசல் விலை ரூ. 10,999 என்றாலும் கூட, இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் மூலம் வெறும் ரூ. 8,099 விலையில் இதை வாங்கிடலாம். இந்த சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க.

3. Redmi 10A


கம்மி விலையில் கைக்கு அடக்கமாக ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? அப்படியானால், நீங்கள் இந்த புதிய Redmi 10A ஸ்மார்ட்போன் (Smartphone) மாடலை தான் தேர்வு செய்ய வேண்டும். இன்று கிடைக்கும் பிளாக்பஸ்டர் தள்ளுபடியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், இந்த டிவைஸை வெறும் ரூ. 8,499 என்ற விலைக்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ. 10,999 ஆகும்.

இப்போது குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்டான Redmi 5G போன்களை பார்க்கலாம்.

4. Redmi 11 Prime 5G


இதுவரை நாம் பார்த்த மாடல்கள் எல்லாம் 4ஜி (4G) சேவையில் செயல்படக்கூடிவை, இப்போது நாம் பார்க்கப் போகும் ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த விலையில் 5ஜி (5G) சேவையில் இயங்கக் கூடிய ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த Redmi 11 Prime 5G ஆகும். இது இந்தியாவில் ரூ. 15,999 என்ற விலையில் அறிமுகமானது. ஆனால், இப்போது கிடைக்கும் சிறப்பு தள்ளுபடியின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 12,999 என்ற விலையில் வாங்க முடியும். இப்போதைக்கு கம்மி விலையில் கிடைக்கும் பெஸ்டான 5ஜி ரெட்மி போன் இதுவாகும்.

5. Redmi Note 11T 5G


சிறப்பான டிசைன், நெக்ஸ்ட் ஜெனெரேஷன் 5ஜி அம்சம், சூப்பர் பாஸ்ட் சார்ஜிங், அட்டகாசமான கேமரா அம்சம், நீடித்து நிலைக்கும் பேட்டரி என்று உங்களுக்கு தேவையான எல்லா அம்சங்களையும் பெஸ்டான ஸ்பெக்ஸ் கொன்டு வெளிவந்துள்ள இந்த Redmi Note 11T 5G போனை இப்போது நீங்கள் வெறும் ரூ. 16,999 விலையில் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 20,999 ஆகும். இத்துடன் 2 மாத YouTube Premium சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.

6. Redmi Note 11 Pro + 5G


அடுத்து நமது redmi 5G போன் வரிசையில் இருக்கும் ப்ரோ மாடல் இதுவாகும். பெஸ்டான லேட்டஸ்ட் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ. 20,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 26,999 ஆகும். இந்த போனின் விலையை ரூ. 19,250 வரை கணிசமாக குறைக்க உங்களுக்கு எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் 5ஜி போனிற்கு அப்கிரேட் ஆகுங்கள்.

7. Redmi K50i 5G


நீங்கள் வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போனில் எல்லாமே பெஸ்ட்டாக இருக்க வேண்டும், லேட்டஸ்ட் அம்சங்களாக (Latest Specs) இருக்க வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயமாக இந்த Redmi K50i 5G ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 31,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையைச் சரியாகப் பயன்படுத்தினால், 22% தள்ளுபடியுடன் வெறும் ரூ. 24,999 விலையில் இந்த சாதனத்தை வாங்கலாம்.

இந்த பெஸ்டான மாடல்களில் எந்த மாடல் உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது என்று பார்த்து, உங்களுக்கு பிடித்தமான ஸ்மார்ட்போனை உடனே வாங்குங்கள். தீபாவளி சிறப்பு விற்பனை நாளையுடன் நிறைவடைகிறது.

English summary
Buy Redmi 4G and 5G Phones With Unbelievable Offers From Amazon Festival Sale 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X