ரூ.699 முதல் வாட்டர் ஹீட்டர்-ஆ.! அடடே.! இவ்வளவு கம்மி விலையில் இத்தனை மாடலா?

குளிர் காலம் ஆரம்பமாகப் போகிறது.. மழைக்காலம் துவங்கிவிட்டது.. காலையில் எழுந்து சாதாரண தண்ணீரில் குளிப்பதே, எதோ ஐஸ் வாட்டரில் குளிப்பது போல் இருக்கிறது..!

தண்ணீரின் சில்னஸ்ஸிற்கு பயந்து சிலர் குளிப்பதற்கே தயக்கம் காட்டுகிறார்கள் என்பதே உண்மை.! குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த கூலான தண்ணீரில் குளிக்க வைப்பது அவர்களுக்கு சளிபிடிக்கச் செய்யும் என்பதனால், பெற்றோர்கள் வெதுவெதுப்பான சூடு தண்ணீரில் குளிக்க வைக்க முயல்கிறார்கள்.

ரூ.699 முதல் வாட்டர் ஹீட்டர்-ஆ.! அடடே.! கம்மி விலையில் இத்தனை மாடலா?

ஆனால், எரிவாயு சிலிண்டர் விற்கப்படும் விலைக்குத் தினமும் நம்மால் சூடு தண்ணீரில் குளிக்க முடியாது. சிலிண்டர் விலையுடன் ஒப்பிடும் போது, மின்சார கட்டணம் குறைவாகவே இருக்கிறது என்பதனால், தாராளமாக ஒரு வாட்டர் ஹீட்டரை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம்.

குறைந்த விலையில் காம்பாக்ட் சைசில் ஏராளமான வாட்டர் ஹீட்டர்கள் இப்போது சலுகையுடன் வாங்க கிடைக்கின்றன. உங்கள் தீபாவளி ஷாப்பிங் லிஸ்டில் இந்த வருடம் ஒரு வாட்டர் ஹீட்டரை சேர்த்துவிடுங்கள். மிகவும் பயனுள்ளதாய் அமையும்.

ரூ.699 முதல் வாட்டர் ஹீட்டர்-ஆ.! அடடே.! கம்மி விலையில் இத்தனை மாடலா?

நீங்கள் வாடகை வீட்டில் இருந்தாலும் சரி, அல்லது சொந்த வீட்டில் இருந்தாலும் சரி, உங்கள் எல்லோருக்கும் ஏற்ற சிறந்த வாட்டர் ஹீட்டர் மாடல்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

குறைந்த விலையாக ரூ. 699 விலை முதல் கிடைக்கும் வாட்டர் ஹீட்டர் ராட் உட்பட, ஒரு பெரிய குடும்பத்திற்குத் தேவையான 25L அளவு கொண்ட வாட்டர் ஹீட்டர் வரை, ரகம் வாரியாக உங்களுக்காகத் தொகுத்துப் பட்டியலிட்டுள்ளோம். வாங்க லிஸ்டை பார்க்கலாம்.

1. Havells Immersion HB15 1500 Watt

Havells Immersion HB15 1500 Watt (White Blue)
₹699.00
₹795.00
12%

நீங்கள் பேச்சிலர் என்றாலோ..அல்லது நீங்கள் சிக்கனமான நபர் என்றாலோ, இந்த வாட்டர் ஹீட்டர் ராட் உங்களுக்கு ஏற்றது. குளிர் காலத்தில் உங்களுக்கு தேவையான சுடு நீரை, இது சில நிமிடங்களில் கொடுக்கும் என்றாலும், ஒரே நேரத்தில் உங்களால் ஒரு நபர் குளிக்க தேவையான ஒரு பக்கெட் தண்ணிரை மட்டுமே இதன் மூலம் உருவாக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதன் அசல் விலை ரூ. 795 ஆகும். ஆனால், சலுகையுடன் இதை இப்போது வெறும் ரூ. 699 விலைக்கு வாங்கலாம். இது 2 வருட வாரண்ட்டி உடன் வருகிறது.

2. Crompton InstaBliss 3-L Instant Water Heater

Crompton InstaBliss 3-L Instant Water Heater (Geyser) with Advanced 4 Level Safety (Ivory), AIWH-3LINSTABLISS
₹2,399.00
₹4,400.00
45%

நீங்கள் வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் அல்லது உங்களுடைய பாத்ரூம் மிகவும் சிறியதாக இருக்கிறது என்றால், இந்த காம்பாக்ட் சைஸ் இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் டிவைஸை உடனே வாங்கிவிடுங்கள். இது ஒரே நேரத்தில் 3L அளவு நீரை சூடு செய்கிறது. 1 அல்ல 2 நபர் குளிக்க போதுமானது. இது 5 வருட வாரண்டி உடன் ரூ. 4,400 விலையில் வருகிறது. ஆனால், இன்றைய சலுகையை பயன்படுத்தி இதை நாம் வெறும் ரூ. 2,399 விலைக்கு வாங்கலாம்.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

3. Havells Instanio 3-Litre Instant Geyser

Havells Instanio 3-Litre Instant Geyser (White/Blue)
₹3,499.00
₹5,870.00
40%

உங்கள் பாத்ரூமிற்கு அழகு சேர்க்கும் நோக்கத்துடன் டிரெண்டியான ஒரு வாட்டர் ஹீட்டரை நீங்கள் தேடுகிறீர் என்றால், இந்த Havells Instanio தான் உங்களுக்கான சரியான சாய்ஸ். இது 3L அளவுடன், அழகான டிஸைனுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 5,870 ஆகும். இன்றைய Amazon சலுகையில் இதை வெறும் ரூ. 3,499 விலையில் வாங்கலாம். இது கலர் சேஞ்சிங் LED லைட் இண்டிகேட்டர் உடன் வருகிறது.

4. Crompton Gracee 5-L Instant Water Heater

Crompton Gracee 5-L Instant Water Heater (Geyser)
₹3,399.00
₹7,299.00
53%

ஒரு முறை ஸ்விட்ச் ஆன் செய்தால், குறைந்தது 3 பேராவது குளிக்க வேண்டும். அல்லது தாராளமாக 2 பேர் குளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பவர்கள் இந்த 5L வாட்டர் ஹீட்டரை வாங்கலாம். கருப்பு நிறத்தில் கச்சிதமாக உங்கள் பாத்ரூமிற்குள் பொருந்தும் இந்த வாட்டர் ஹீட்டரின் அசல் விலை ரூ. 7,299 ஆகும். இதன் இன்றைய சலுகை விலை ரூ. 3,399 மட்டுமே. இது 5 வருட டேங்க் + 2 வருட எலெமென்ட் + 2 வருட தயாரிப்பு வாரண்டி உடன் வருகிறது.

5. Crompton Arno Neo 10-L Storage Water Heater

Crompton Arno Neo 10-L 5 Star Rated Storage Water Heater with Advanced 3 Level Safety (White)
₹5,308.00
₹8,500.00
38%

இந்த 2L, 3L, 5L என்ற கணக்கே வேண்டாம், குளித்தால் தாராளமாகக் குளிக்க வேண்டும், ஒரு 10L அளவுல பெஸ்டான மாடல் இருந்தா சொல்லுங்க.. ஆனா, கண்டிப்பா 5 ஸ்டார் ரேட்டிங் இருக்க வேண்டும் என்று சாமர்த்தியமாக டிமாண்ட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர் தான் மிகச் சரியானது. இதன் அசல் விலை ரூ. 8,500 ஆகும். இன்றைய சலுகை விலை ரூ. 5,308 மட்டுமே. உடனே வாங்குங்கள்.

ரூ.7000 முதல் புது பிரிட்ஜ் வாங்கலாமா? சிங்கிள் டோர் Refrigerator வாங்கலாமா? வேண்டாமா?ரூ.7000 முதல் புது பிரிட்ஜ் வாங்கலாமா? சிங்கிள் டோர் Refrigerator வாங்கலாமா? வேண்டாமா?

6. V-Guard Victo 15 Litre Water Heater

V-Guard Victo 15 Litre Water Heater with Free Installation & Free Connection Pipes (BEE 5 Star Rated), White (15 Litre)
₹6,693.00
₹9,800.00
32%

இது 15L வாட்டர் ஹீட்டர் மாடலாகும். தாராளமான 3 அல்ல 4 பேருக்கு மேல் குளிக்கலாம். இது இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் இலவச பைப் / கனெக்டர்களுடன் வருகிறது. 4 பேர் கொண்ட குடும்பம் குளிக்க இது ஏற்ற மாடலாகும். இது 5 ஸ்டார் ரேட்டிங் உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 9,800 ஆகும். இன்றைய சலுகை மூலம் இதை நாம் வெறும் ரூ. 6,693 என்ற விலைக்கு வாங்க முடியும்.

7. AO Smith Storage 25 Litre Vertical Water Heater

AO Smith SDS-GREEN SERIES-025 Storage 25 Litre Vertical Water Heater (Geyser) White 5 Star
₹10,399.00
₹16,200.00
36%

பிரீமியம் வாட்டர் ஹீட்டர் மாடலை தேடுவோருக்கு இது பெஸ்ட் சாய்ஸ். இந்த வாட்டர் ஹீட்டர் 25L அளவுடன் வருகிறது. 5 அல்லது 6 நபர்கள் குளிக்க ஏற்றது. இது 7 வருட டேங்க் + 2 வருட எலெமென்ட் + 2 வருட தயாரிப்பு வாரண்டி உடன் வருகிறது. இதை இப்போது நாம் சலுகை விலையில் வெறும் ரூ. 10,399 விலைக்கு வாங்கலாம். இந்த மாடல் மீது ரூ. 497 என்ற EMI விருப்பமும் உள்ளது. இதன் அசல் விலை ரூ. 16,200 ஆகும்.

குளிர் காலம் துவங்குவதால் கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாட்டர் ஹீட்டர் இருப்பது அவசியமாகிறது. உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருந்தால், உங்கள் ஷாப்பிங் லிஸ்டில் உடனே ஒரு வாட்டர் ஹீட்டரை வாங்கிவிடுங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X