போன் வாங்குனா கார் இலவசம்.! இந்த லிஸ்ட்ல இருக்க ஏதாச்சும் 1 போன் வாங்குனா போதும்.!

எது.. புதுசா போன் வாங்கினால், கார் இலவசமா? என்ன பாஸ் சொல்றீங்க உண்மையாவா? என்று நீங்கள் சந்தேகத்துடனும், வியப்புடனும் நம்பாமல் கேட்பது எங்களுக்குக் கேட்கிறது.! ஆம், உண்மை தான் மக்களே.!

நீங்கள் படித்தது சரி தான், புதிதாக ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்கினால், இலவசமாக ஒரு புதிய காரை நீங்கள் வெல்வதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

போன் வாங்குனா கார் இலவசம்.! ஏதாச்சும் 1 போன் வாங்குனா போதும்.!

Amazon தளத்தில் தீபாவளி விற்பனை கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விற்பனையில் பல ஸ்மார்ட்போன் பிராண்ட்கள் பல தள்ளுபடியை அறிவித்திருந்தாலும், Tecno நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த லிஸ்டில் இருக்கும் Tecno ஸ்மார்ட்போன்களில் (Tecno Smartphones) ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கினால் கூட, ஒரு புதிய காரை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.

போன் வாங்குனா கார் இலவசம்.! ஏதாச்சும் 1 போன் வாங்குனா போதும்.!

அக்டோபர் 22ம் தேதி முதல் துவங்கி 31 ஆம் தேதிக்குள், டெக்னோ பிராண்டின் கீழ் கிடைக்கும் ஏதேனும் ஒரு ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வாங்கினால் கூட, இந்த லக்கி சான்சை நீங்கள் பெறலாம்.

கார் மட்டுமில்லை இன்னும் ஏராளமான பொருட்களை டெக்னோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது, முழுமையான விஷயத்தை அறிந்துகொள்ள இந்த பதிவை இறுதி வரை படியுங்கள்.

1. Tecno Pop 5 LTE

இந்த சிறப்பு பண்டிகை கால விற்பனையில் கிடைக்கும் மிகவும் மலிவான விலை ஸ்மார்ட்போன் மாடல் என்றால், அது இந்த Tecno Pop 5 LTE மாடல் மட்டும் தான். இது ரூ.5,000 விலை வரம்பில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் மூலம் வெறும் ரூ. 5,799 விலையில் கிடைக்கிறது.

2. Tecno POP 6 Pro
இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடலாகும். இப்போது சலுகையுடன் இந்த டிவைஸை வெறும் ரூ. 6,298 என்ற விலைக்கு நாம் வாங்கலாம். இதில் கவனிக்க வேண்டிய சிறப்பான விஷயம் என்னவென்றால், இது Boat Bassheads இலவச ஹெட்போன்ஸ் உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 9,289 ஆகும்.

3. Tecno Spark 8T
இது டெக்னோவின் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் வருகிறது. குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன் வாங்கக் கிடைக்கும் மாடல் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 12,999 என்றாலும் கூட, இன்றைய சலுகையின் மூலம் இதை வெறும் ரூ. 8,499 விலையில் வாங்கலாம்.

4. Tecno Spark 8 Pro
இந்த ஸ்மார்ட்போன் டெக்னோ 8 சீரிஸ் வரிசையில் கிடைக்கும் ப்ரோ மாடலாகும். ப்ரோ மாடல் என்று சொன்னாலே, இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் பெஸ்டாக தான் இருக்கும். இந்த போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். அடுத்த 6 நாட்களுக்குள் இதை நீங்க வெறும் ரூ. 8,999 என்ற சலுகை விலையில் வாங்கலாம்.

5. Tecno Spark 9
இவ்வளவு குறைவான விலையில், இவ்வளவு அதிக ரேம் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் இப்போது இந்தியாவில் பார்க்கவே முடியாது. இந்த Tecno Spark 9 சாதனம் 11ஜிபி வரையிலான ரேம் அம்சத்தை வெறும் ரூ. 13,499 என்ற அசல் விலையில் வழங்குகிறது. இதை இன்னும் குறைந்த விலையில் வாங்க நினைத்தால், அடுத்த 6 நாட்கள் நீடிக்கும் சலுகையை நீங்கள் நழுவ விடக்கூடாது. சலுகை விலை ரூ. 9,249 மட்டுமே.

6. Tecno POVA Neo
டெக்னோவின் POVA சீரிஸ் வரிசையில் கிடைக்கும் சூப்பர் கூல் ஸ்மார்ட்போன் சாதனம் இது. இந்த டிவைஸ் 6000mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 15,499 ஆகும். ஆனால், சலுகையுடன் இதை நீங்கள் வெறும் ரூ. 10,499 விலைக்கு வாங்கலாம்.

7. Tecno POVA 3
இதற்கு முன் நாம் பார்த்த ஒட்டுமொத்த மாடல்களில் கிடைக்கும் அம்சங்கள் அனைத்தையும் இந்த Tecno POVA 3 பேக் செய்கிறது. 11ஜிபி ரேம், 7000mah பேட்டரி, 50MP ட்ரிபிள் ரியர் கேமரா என்று ஒரு பவர்புல் போனாக இது இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 13,199 விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 15,999 மட்டுமே. அடுத்த 6 நாட்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

8. Tecno Camon 18
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மிக டிரெண்டிங்கான ஸ்மார்ட்போன் மாடல் இது தான். அட்டகாசமான வடிவமைப்பு, சிறப்பான அம்சங்கள், கவர்ந்திழுக்கும் கலர் என்று எல்லாமே இதில் நம்மை ஈர்க்கிறது. இதன் அசல் விலை ரூ. 17,999 ஆகும். இப்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இதை வெறும் ரூ. 13,499 விலையில் வாங்கலாம்.

9. Tecno Camon 19 Neo
2022 ஆம் ஆண்டில் சிறந்த டிசைன் ஸ்மார்ட்போன் விருதை இந்த Tecno Camon 19 Neo வென்றுள்ளது. 11ஜிபி ரேம், சூப்பர் நைட் மோட் போட்டோ ட்ரிபிள் கேமரா கேப்ச்சரிங், கூடுதல் ஸ்டோரேஜ் என்று இதில் பல அம்சங்கள் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. இதன் அசல் விலை ரூ. 18,499 என்றாலும் கூட, இப்போது இதை நாம் வெறும் ரூ. 14,999 என்ற விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகை விலை அடுத்த 6 நாள் நீடிக்கும்.

10. Tecno POVA 5G
பட்ஜெட் விலையில் ஒரு பெஸ்டான 5ஜி போனை நீங்கள் வாங்க விருப்பினால், உங்கள் சாய்ஸ் இந்த Tecno POVA 5G போனாக தான் இருக்க வேண்டும். இந்த டிவைஸ் இந்தியாவில் ரூ. 28,999 என்ற அசல் விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இன்று கிடைக்கும் சலுகையின் மூலம் ரூ. 13, 700 விலை குறைக்கப்பட்டு, இப்போது வெறும் ரூ. 15,299 விலையில் வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போன் வாங்குனா கார் இலவசம்.! ஏதாச்சும் 1 போன் வாங்குனா போதும்.!

11. Tecno Camon 19 Pro Mondrian
பட்ஜெட் விலையில் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களையோ அல்லது ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போனையோ வாங்க நினைப்பவர்கள் இந்த போனை தாராளமாக வாங்கலாம். சூப்பர் கூல் வடிவமைப்புடன், அட்டகாசமான அம்சங்களுடன் இது ரூ. 24,999 என்ற அசல் விலையில் அமேசான் இல் கிடைக்கிறது. ஆனால், சலுகையுடன் வெறும் ரூ. 17,999 விலையில் அடுத்த 6 நாட்களுக்கு வாங்கக் கிடைக்கிறது.

போன் வாங்குனா கார் இலவசம்.! ஏதாச்சும் 1 போன் வாங்குனா போதும்.!

12. Tecno Phantom X
பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர் நீங்கள் என்றால், உங்கள் சாய்ஸ் இந்த Tecno Phantom X மாடலாக தான் இருக்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 32,999 ஆகும். இன்றைய சலுகையுடன் இதை நீங்கள் வெறும் ரூ. 25,999 என்ற விலையில் வாங்கலாம்.

நாங்கள் மேற் கூறியுள்ள எந்த ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வாங்கினாலும், இலவசமாக ஒரு புதிய காரை வெல்வதற்கான வாய்ப்பை பெறுவீர்கள் என்பதே உண்மை. இந்த சிறப்பு விற்பனை முடிவு பெரும் போது, எந்த லக்கி வின்னருக்கு கார் கிடைத்தது என்பதை அமேசான் அறிவிக்கும்.

இது போக வாரம்- வாரம் இன்னும் ஏராளமான பொருட்களை லக்கி சான்ஸ் வின்னர்களுக்கு Tecno வழங்குவதாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதே.!

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X