அமேசான்: தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.!
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சில ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒப்போ, ரியல்மி, சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் இந்நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஒப்போ ஏ74 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.49-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட்வசதி, ColourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி,
ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி மாடல்.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி மாடல். அதேபோல் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32 5ஜி மாடல். 5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி மாடல்.
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.19,999-விலையில் வாங்க முடியம். குறிப்பாக இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது 6.67-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080x2400 பிக்சல்
தீர்மானம், எச்டிஆர் 10 ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட், 5020 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 5எம்பிமேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்.
சியோமி 11 லைட் என்இ 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி, 4250 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி 11 லைட் என்இ 5ஜி மாடல். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,
என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ மாடல்.


Click it and Unblock the Notifications