Home
Deal of the day

அமேசான்: ரூ.19,500-க்கு கீழ் கிடைக்கும் ரெட்மி, போக்கோ ஸ்மார்ட்போன்கள்.!

ரெட்மி, போக்கோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: ரூ.19,500-க்கு கீழ் கிடைக்கும் ரெட்மி, போக்கோ ஸ்மார்ட்போன்கள்

மேலும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.19,500-க்கு கீழ் கிடைக்கும் ரெட்மி, போக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்32

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட போக்கோ எம்32 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும்போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதியுடன் ஏஆர்எம் மாலி-ஜி52 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் +
5எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எக்ஸ்3

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.19,500-விலையில் வாங்கமுடியும். மேலும் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் கொண்ட 1080 × 2400 பிக்சல்கள் உடைய டிஸ்ப்ளேவுடன், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா 5 பாதுகாப்புடன் வருகிறது. இது 240Hz தொடு மாதிரி விகிதத்துடன் 120Hz புதுப்பிப்பு வீதக் காட்சியைக் கொண்டுள்ளது. போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 618 ஜி.பீ.யு ஆதரவும் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 682 சென்சார், 13 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் 4cm மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் சென்சார் கொண்ட பஞ்ச் ஹோல் கட்அவுட் செல்பி கேமரா வைக்கப்பட்டுள்ளது. போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 4 ஜி வோல்ட்இ, வைஃபை, ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், இரட்டை ஸ்டீரியோ ,கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இவற்றுள் அடக்கம். மேலும்

ரெட்மி 10 பிரைம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி, 6000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் துல்லியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரெட்மி 9

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனை ரூ.9499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம்,
20:9 என்ற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன். குறிப்பாக ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், என்எப்சி (விரும்பினால்),யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன்.

English summary
Budget Redmi Poco smartphones available on Amazon!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X