52% தள்ளுபடி விலையில் டேப் வாங்கலாம்: அமேசானில் டேப் வாங்க சரியான நேரம்!
ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கேட்ஜெட்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அதன்படி அமேசான் தளத்தில் தள்ளுபடியுடன் கிடைக்கும் பட்ஜெட் விலை டேப் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

லெனோவா டேப் யோகா 11
லெனோவா டேப் யோகா 11 சாதனமானது 11 இன்ச் அளவோடு வருகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் வைஃபை+, எல்டிஇ அம்சம் மற்றும் ஸ்டார்ம் க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த டேப் ஆனது ரூ.40,000 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டேப் ஆனது ரூ.27,999 என கிடைக்கிறது. இந்த டேப் ஆனது 30% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.12,001 என்ற விலைக்குறைப்புடன் வருகிறது. இந்த டேப் ஆனது 11 இன்ச் அளவில் கிடைக்கிறது. அதேபோல் இந்த டேப் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 11 இன்ச் முழு எச்டி 2கே அளவுகளில் 400 நிட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது. இது 8 எம்பி பிரதான கேமரா மற்றும் 8 எம்பி இரண்டாம் நிலை கேமராவுடன் வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 7500 எம்ஏஎச் பேட்டரி உடன் குவாட் ஜேபிஎல் ஸ்பீக்கர் டால்பி அட்மாஸ் டூயல் மைக்ரோபோன் அம்சத்தை கொண்டிருக்கிறது.
லெனோவா டேப் எம்8 எச்டி டேப்லெட்
லெனோவா டேப் எம்8 எச்டி டேப்லெட் ஆனது 8 இன்ச் அளவுடன் வருகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் வைஃபை ஆதரவு மற்றும் க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த டேப் ஆனது ரூ.14,000 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டேப் ஆனது ரூ.9,455 ஆக இருக்கிறது. இந்த டேப் ஆனது 32% தள்ளுபடியுடன் அதாவது ரூ.4545 விலைக் குறைப்புடன் வருகிறது. இந்த டேப் ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு வருகிறது. இந்த டேப் 2-வது ஜென் 8 இன்ச் அளவோடு ஆண்ட்ராய்டு ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த டேப் ஆனது 8 எம்பி பிரைமரி கேமரா ஆட்டோ ஃபோகஸ் வசதியோடு வருகிறது. அதோடு 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி முன்புற கேமரா உடன் வருகிறது. இந்த டேப் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஏ22 டேப் ப்ராசஸர் வசதியோடு வருகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் ஆனது 8.7 இன்ச் அளவோடு வருகிறது. இது ஸ்லிம் மெடல் பாடி, டால்பி அட்மாஸ் சவுண்ட் ஆதரவை கொண்டுள்ளது. அதேபோல் இந்த டேப் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த மெமரி நீட்டிப்பு மற்றும் வைஃபை ஆதரவோடு வருகிறது. இது க்ரே வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த டேப் விலை ரூ.14500 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த டேப் ஆனது ரூ.11,875 என கிடைக்கிறது. இந்த டேப் ஆனது 18% தள்ளுபடியுடன் ரூ.2625 என்ற விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த டேப் ஆனது டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ஆதரவோடு 5100 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 8 எம்பி பின்புற கேமரா, 2 எம்பி முன்புற கேமரா ஆதரவோடு வருகிறது.
2020 ஆப்பிள் ஐபாட் ஏர்
2020 ஆப்பிள் ஐபாட் ஏர் ஆனது ஏ14 பயோனிக் சிப் வசதியோடு 10.9 இன்ச் அளவில் கிடைக்கிறது. இந்த டேப் வைஃபை+. 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது ஸ்கை ப்ளூ வண்ண விருப்பத்தோடு 4-வது ஜென் சாதனமாகும். இந்த டேப் ஆனது ரூ.66,900 ஆக இருந்த நிலையில் தற்போது இது ரூ.59,900 ஆக இருக்கிறது. இந்த டேப் ஆனது 10% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.7000 விலைக்குறைப்புடன் வருகிறது. இந்த டேப் ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு கிடைக்கிறது.
லெனோவா டேப் எம்10 முழு எச்டி ப்ளஸ்
லெனோவா டேப் எம்10 முழு எச்டி ப்ளஸ் டேப்லெட் ஆனது 10.3 இன்ச் அளவோடு வருகிறது. இந்த டேப் ஆனது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த டேப் ஆனது ரூ.27,000 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டேப் ஆனது ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த டேப் ஆனது 52% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.14,001 என விலைக்குறைப்புடன் வருகிறது. இந்த டேப் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ், 8 எம்பி ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் 5 எம்பி முன்புற செல்பி கேமரா ஆதரவோடு வருகிறது. இது 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22டி ஆக்டோ கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது. டேப் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். முழு எச்டி ப்ளஸ் டேப்லெட் ஆனது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது வைஃபை ப்ளஸ் எல்டிஇ ஆதரவோடு வருகிறது. இது பிளாட்டினம் க்ரே வண்ண விருப்பத்தை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications