Smartwatch மீது 90% தள்ளுபடி.! ரூ.999 முதல் பெஸ்டான ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட் வாட்ச்கள்.!

Amazon Great Indian Festival Sale கோலாகலமாக இன்று முதல் துவங்கிச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ஏராளமான தயாரிப்புகள் மற்றும் சாதனங்கள் மீது நம்ப முடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன தான் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் மீது பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய டிரெண்டிற்கு ஏற்ப நம் கைக்கும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வேண்டும் என்று நினைக்கும் நபராக நீங்கள் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.

Smartwatch மீது 90% தள்ளுபடி.! ரூ.999 முதல் பெஸ்டான ஸ்மார்ட் வாட்ச்!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் முதல் முறையாக Smart Watch சாதனங்கள் மீது 90% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பட்ஜெட் ரேட் இல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்மார்ட்வாட்ச்கள் எல்லாம் இப்போது மிகவும் மலிவான விலையில் வாங்கக் கிடைக்கின்றன. குறிப்பாக, ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்கள் இப்போது ரூ.999 விலை முதல் வாங்கக் கிடைக்கின்றன. ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

1. pTron Force X10 Bluetooth Calling Smartwatch


இது இந்தியாவில் ஒரு புதுவரவு ஸ்மார்ட்வாட்ச் சாதனமாகும். இந்த pTron Force X10 Bluetooth Calling Smartwatch டிவைஸின் அசல் விலை ரூ. 5,999 ஆகும். ஆனால், இன்றைய சிறப்பு தள்ளுபடியின் ஒரு பகுதியாக இது இப்போது வெறும் ரூ.999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது 83% தள்ளுபடி கிடைப்பதால், உங்களுக்கு ரூ.5,000 மிச்சமாகிறது.

2. Zebronics DRIP Smart Watch with Bluetooth Calling


கேம் பிரியர்களுக்கான பெஸ்டான ஸ்மார்ட் வாட்ச் சாதனம் இந்த Zebronics DRIP Smart Watch மட்டும் தான். காரணம், இந்த வாட்சில் 4 இன்பில்ட் கேம்கள் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் இயங்கும் இந்த டிவைஸின் அசல் விலை ரூ.6,499 ஆகும். இன்றைய சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 1,699 என்ற விலையில் வாங்கலாம். இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ. 4,800 (74%) தள்ளுபடி செய்யப்படுகிறது.

3. Noise Pulse Go Buzz Advanced Bluetooth Calling Smart Watch


ஸ்மார்ட் வாட்ச் என்றாலே எல்லோரும் Noise பிராண்டிற்கு தான் செல்கிறார்கள். அப்படியான ஒரு நம்பகமான பிராண்டில் இருந்து ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.4,999 ஆகும். இன்றே இதை உடனே வாங்க நினைத்தால், உங்களுக்கு ரூ.3,600 (72%) தள்ளுபடியோடு, வெறும் ரூ.1,399 என்ற விலையில் இதை நீங்கள் வாங்கிட முடியும்.

4. boAt Wave Call Smart Watch


Noise பிராண்ட் போல boAt நிறுவனமும் இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ. 7,990 ஆகும். சலுகையின் ஒரு பகுதியாக இது இப்போது வெறும் ரூ. 1,699 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையை பயன்படுத்திக்கொண்டால், உங்களுக்கு ரூ.6,291 (79%) தள்ளுபடி கிடைக்கிறது.

5. Fire-Boltt Ninja Call Pro Dual Chip Bluetooth Calling Smartwatch


இன்றைய சிறப்பு விற்பனையில் அதிக தள்ளுபடி கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் இந்த சாதனம் மட்டும் தான். Fire-Boltt Ninja Call Pro மீது 90% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் அசல் விலை ரூ. 17,999 ஆகும். ஆனால், 90% தள்ளுபடியில், உங்களுக்கு ரூ. 16,200 தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த டிவைஸ் இன்று வெறும் ரூ. 1,799 என்ற நம்ப முடியாத விலையில் கிடைக்கிறது. உண்மையில் இது யாருக்கும் கிடைக்காத லக்கி சான்ஸ் தான்.

6. Noise ColorFit Pro 4 Max


டிரெண்ட் உடன் கூலான டிசைனில், எலைட் லுக்கில் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் இந்த Noise ColorFit Pro 4 Max வாட்சை தான் தேர்வு செய்ய வேண்டும். இதன் அசல் விலை ரூ.5,999 ஆகும். இதன் மீது ரூ. 2,200 (37%) தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த டிவைஸை நீங்கள் வெறும் ரூ.3,799 விலையில் வாங்கலாம்.

புதிய ஸ்மார்ட் வாட்ச் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த சலுகையைக் கட்டாயம் தவறவிடவே கூடாது. இந்த 6 ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள் போக, இன்னும் ஏராளமான ஸ்மார்ட் வாட்ச்கள் மீதும் இப்போது சலுகை கிடைக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கூடுதல் ஸ்மார்ட் வாட்ச் விபரங்களுக்கு அமேசான் ஸ்மார்ட் வாட்ச் சலுகை பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X