Home
Deal of the day

Redmi 4G மற்றும் 5G போன்கள் மீது பிளாக்பஸ்டர் தள்ளுபடி.! ரூ.6000 முதல் புது போன் வாங்கலாமா?

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. Amazon தளத்தில் தள்ளுபடி மழை பொழியத் துவங்கிவிட்டது. குறிப்பாக, ரெட்மி (Redmi) நிறுவனத்தின் 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகள் அடைமழையாய் வெளுத்து வாங்குகிறது.

ஆம், Redmi ஸ்மார்ட்போன்கள் மீது பிளாக்பஸ்டர் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை (Blockbuster Deals and Offer) அமேசான் நிறுவனம் தற்போது வழங்குகிறது. மிகக் குறைந்த விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க மிகச் சரியான நேரம் இது தான். உடனே, இன்று கிடைக்கக்கூடிய சிறப்புத் தள்ளுபடி விபரங்கள் கீழே செக் செய்யுங்கள்.

Redmi 4G மற்றும் 5G போன்கள் மீது பிளாக்பஸ்டர் தள்ளுபடி.!

1. Redmi A1


ரெட்மி நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும். மிகக் குறைந்த விலையில் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் கிடைக்கும் இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 8,999 ஆகும்.

இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் (Blockbuster Offer) மூலம், இதை நாம் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் வாங்கலாம். இதன் மெது 30% தள்ளுபடி கிடைக்கிறது.

2. Redmi 9 Activ


Redmi பிராண்டில் இருந்து மலிவு விலையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல் என்றால், அது இந்த Redmi 9 Activ ஸ்மார்ட்போன் சாதனம் மட்டும் தான்.

இதன் அசல் விலை ரூ. 10,999 என்றாலும் கூட, இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் மூலம் வெறும் ரூ. 8,099 விலையில் இதை வாங்கிடலாம். இந்த சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க.

3. Redmi 10A


கம்மி விலையில் கியூட்-ஆ.! ஸ்டைல்-ஆ.! ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? அப்படியானால், நீங்கள் இந்த புதிய Redmi 10A ஸ்மார்ட்போன் (Smartphone) மாடலை தான் தேர்வு செய்ய வேண்டும்.

இன்று கிடைக்கும் பிளாக்பஸ்டர் தள்ளுபடியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், இந்த டிவைஸை வெறும் ரூ. 8,499 என்ற விலைக்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ. 10,999 ஆகும்.

4. Redmi 11 Prime 5G


இதுவரை நாம் பார்த்த மாடல்கள் எல்லாம் 4ஜி (4G) சேவையில் செயல்படக்கூடிவை, இப்போது நாம் பார்க்கப் போகும் ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த விலையில் 5ஜி (5G) சேவையில் இயங்கக் கூடிய ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடலாகும்.

இந்த Redmi 11 Prime 5G இந்தியாவில் ரூ. 15,999 என்ற விலையில் அறிமுகமானது. ஆனால், பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 12,999 என்ற விலையில் வாங்க முடியும். இப்போதைக்கு கம்மி விலையில் கிடைக்கும் பெஸ்டான 5ஜி போன் இதுவாகும்.

5. Redmi Note 11


யூடியூப் இல் நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்களா? அப்போ, கண்ணை மூடிக்கொண்டு இந்த Redmi Note 11 போனை வாங்கிவிடுங்கள். பிளாக்பஸ்டர் தள்ளுபடியாக இந்த போனை நீங்கள் வாங்கினால், உங்களக்கு 2 மாத YouTube Premium சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.

இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 18,999 என்றாலும் கூட, இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இதை நீங்கள் வெறும் ரூ. 13,999 என்ற விலைக்கு வாங்கிட முடியும்.

6. Redmi K50i 5G


நீங்கள் வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போனில் எல்லாமே பெஸ்ட்டாக இருக்க வேண்டும், லேட்டஸ்ட் அம்சங்களாக (Latest Specs) இருக்க வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயமாக இந்த Redmi K50i 5G ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். 'என்ன வேண்டும் உங்களுக்கு, எல்லாமே இதில இருக்கு' என்று சொல்லும் படி, பெஸ்டான ஸ்பெக்ஸ் உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

இதன் அசல் விலை ரூ. 31,999 ஆகும். ஆனால், இன்றைய பிளாக்பஸ்டர் சலுகையைப் (Blockbuster Offer) பயன்படுத்தினால், 22% தள்ளுபடியுடன் வெறும் ரூ. 24,999 விலையில் இந்த சாதனத்தை வாங்கலாம்.

இந்த பெஸ்டான மடல்களில் எந்த மாடல் உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது என்று பார்த்து, உங்களுக்கு பிடித்தமான ஸ்மார்ட்போனை உடனே வாங்குங்கள்.

English summary
Blockbuster Deals and Offers On Redmi 4G and 5G Smartphones To Buy Today. தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. Amazon தளத்தில் தள்ளுபடி மழை பொழியத் துவங்கிவிட்டது. குறிப்பாக, ரெட்மி (Redmi) நிறுவனத்தின் 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகள் அடைமழையாய் வெளுத்து வாங்குகிறது. ஆம், Redmi ஸ்மார்ட்போன்கள் மீது பிளாக்பஸ்டர் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை (Blockbuster Deals and Offer) அமேசான் நிறுவனம் தற்போது வழங்குகிறது. மிகக் குறைந்த விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க மிகச் சரியான நேரம் இது தான்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X