Home
Deal of the day

அமேசானில் கூட்டம்.. ரூ.12000 விலை குறைப்பு.. 100W சார்ஜிங், 6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.20000 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய என் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை (New OnePlus N Series Smartphones) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதி செய்த வேகத்தில், இந்தியாவில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் விலை கடுமையாக குறைக்கப்பட்டு உள்ளது.

தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.69,999 க்கு பதிலாக ரூ.57,998 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.12000 நேரடி விலை குறைப்பாகும்.

ரூ.12000 விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி OnePlus 5ஜி போன்!

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது

முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

புதிய ஒன்பிளஸ் என் சீரீஸ்: பொதுவாக ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் (உயர்தர) மற்றும் மிட்-ரேஞ்ச் (நடுத்தர விலை) பிரிவுகளில் மட்டுமே ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது; பட்ஜெட் விலை பிரிவில் இதுவரை போன்களை அறிமுகப்படுத்தியதில்லை. சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் சிஇ6 லைட் (OnePlus Nord CE6 Lite) ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை கூட ரூ.22,999 ஆகும். ஆனால், வரவிருக்கும் ஒன்பிளஸ் என் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000-க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) வழியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்மார்ட்ப்ரைஸ் (SmartPrix) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் என் சீரிஸ் என்பது பல்வேறு நிலைகளை (Tiers) இலக்காக கொண்ட பல ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஒரு புதிய பட்ஜெட் சீரீஸ் ஆக இருக்கும். அதாவது நாம், என் சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து பல வகையான மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம்.

இப்போதைக்கு இந்த சீரீஸின் கீழ் வரும் ஸ்மார்ட்போன்கள் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் இருக்கும் என்றும் வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, இந்த சீரீஸின் கீழ் வரும் அனைத்து போன்களும் பட்ஜெட் பிரிவை சார்ந்ததாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Big Price Cut on OnePlus 13 Just After OnePlus Confirmed Its New N Series Smartphone Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X