அமேசான்: சலுகை விலையில் கிடைக்கும் தரமான டேப்லெட் மாடல்கள்.!
இந்திய சந்தையில் தற்போது ஸ்மார்ட்போன்களை விட டேப்லெட் மாடல்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகள் படிப்பது முதல் பாடல் கேட்பது வரை பல தேவைகளுக்கு பயன்படுகிறது டேப்லெட்.

மேலும் அலுவலக வேலை, படிப்பு, வீடியோ அழைப்பு மற்றும் சிறந்த பொழுதுபோக்கிற்கும் அதிகமாக பயன்படுவதும் டேப்லெட் மாடல்கள் தான். சரி இப்போது விஷயத்துக்கு வரும். அமேசான் தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கும் டேப்லெட் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலின் அசல் விலை ரூ.14,500 ஆகும். ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த டேப்லெட் மாடலை ரூ.10,498-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் 8.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் மீடியாடெக்8768டி பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 3ஜிபி ரேம், 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள், 5100 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உட்பட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல்.
நோக்கியா டி20 டேப்
அமேசான் தளத்தில் நோக்கியா டி20 டேப்லெட் மாடலின் அசல் விலை ரூ.19,499-ஆகும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த டேப்லெட் மாடலை ரூ.15,998-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 10.4 இன்ச் 2 கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட். மேலும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், யூனிசாக் டி 610 ப்ராசஸர் மற்றும் மாலி-ஜி 52 ஜிபியு ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், பவர் அம்ப்ளிஃபையர், டூயல் மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி20 டேப். அதேபோல் நோக்கியா டி20 டேப்லெட் ஆனது 8200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா போன்ற தரமான வசதிகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட்.
லெனோவா எம்10
லெனோவா எம்10 ஃபுல் எச்டி பிளஸ் டேப்லெட் மாடலுக்கு தற்போது அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த டேப்லெட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,998-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் 10.3-இன்ச் டிஸ்பிளே, 1920 X 1200 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் 1.8ஜிகாஹெர்ட் மீடியாடெக்
ஹீலியோ பி22டி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 4ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த லெனோவா எம்10 ஃபுல் எச்டி பிளஸ் டேப்லெட்.
டிசிஎல் டேப் 10
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி கொண்ட டிசிஎல் டேப் 10 மாடலை அமேசான் தளத்தில் ரூ.7,998-விலையில் வாங்க முடியும். இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த டிசிஎல் டேப்லெட் மாடல். எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 5500 எம்ஏஎச் பேட்டரி, 5எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா மற்றும் தரமான ஆடியோ வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த டிசிஎல் டேப் 10 மாடல். குறிப்பாக இந்த டிசிஎல் டேப்லெட் கருப்பு நிறத்தில் கிடைக்கும்.
லெனோவா டேப் எம்7
லெனோவா டேப் எம்7 மாடலை அமேசான் தளத்தில் ரூ.7,970-விலையில் வாங்க முடியும். இந்த டேப்லெட் மாடல் ஆனது தனித்துவமான அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் 7-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது இந்த லெனோவா டேப்லெட். மேலும் மீடியாடெக் எம்டி8166 பிராஸசர், 5எம்பி ரியர் கேமரா, 2எம்பி செல்பீ கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.


Click it and Unblock the Notifications