Home
Deal of the day

மீண்டும் தொடங்கும் ஆன்லைன் வகுப்பு- தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த டேப்: அமேசான் அதிரடி சலுகை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் ஆண்டுக்கும் அதிகமாக மூடிய நிலை ஏற்பட்டு இருந்தது. நோய் பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் படிப்படியாக திறக்கும் நிலைக்கு வந்தது. இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு முழுமையாக திறக்க பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது, அதேபோல் ஒமைக்ரான் பரவலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆன்லைன் வகுப்பு- தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த டேப்: அமேசான்

இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், பிற வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கு டேப் என்பது பிரதான தேவையாக இருக்கும். இந்த நிலையில் அமேசான் தளத்தில் டேப்-களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லெனோவா டேப் கே10 முழு எச்டி டேப்

லெனோவா டேப் கே10 முழு எச்டி டேப் ஆனது 10.3 இன்ச் அளவோடு வருகிறது. இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த டேப் ஆனது வைஃபை எல்டிஇ, காலிங் வசதியோடு, அபிஸ் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த டேப் ஆனது ரூ.30,000-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டேப் ரூ.16,999-க்கு கிடைக்கிறது. இந்த டேப்-ஐ ரூ.13,001 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம். அதாவது இந்த டேப்-க்கு 43% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த டேப்-ஐ நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்திலும் வாங்கலாம். இது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப்

சாம்சங் கேலக்ஸி டேப் ஆனது எஸ்6 லைட் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த டேப் ஆனது எஸ்6 லைட் ஆனது 10.4 இன்ச் அளவோடு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த டேப் ஆனது எஸ்-பென் உடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்லிம் ஆன வடிவமைப்போடு, வைஃபை டேப்லெட் மற்றும் ஆக்ஸ்போர்ட் க்ரே வசதியோடு வருகிறது. இந்த டேப் ஆனது ரூ.30,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டேப் ஆனது ரூ.25,999 என கிடைக்கிறது. இந்த டேப் 16% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.5000 விலைக்குறைப்போடு வருகிறது.

லெனோவா காலிங் டேப்

லெனோவா காலிங் டேப் எம்8 ஆனது 2-வது தலைமுறை டேப் ஆகும். இந்த டேப் ஆனது 8 இன்ச் அளவுடன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது வைஃபை+, 4ஜி எல்டிஇ +, காலிங் ஆதரவுடன் அயர்ன் க்ரே வண்ண விருப்பத்தை கொண்டிருக்கிறது. இந்த டேப் ஆனது ரூ.16,000 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 10,990 என கிடைக்கிறது. இந்த டேப்-க்கு 31% தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த டேப்-ஐ நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். இந்த லெனோவா டேப் ஆனது 2 வது தலைமுறை ஆதரவோடு 8 இன்ச் அளவு 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு க்ரே வண்ண விருப்பத்தை கொண்டிருக்கிறது. இந்த டேப் ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் மற்றும் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஏ22 டேப் குவாட் கோர் ப்ராசஸர் வசதியுடன் வருகிறது. இந்த டேப் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த டேப் 5000 எம்ஏஎச் லித்தியம் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.

லெனோவா டேப் பி11

லெனோவா டேப் பி11 ஆனது 11 இன்ச் அளவில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த டேப் ஆனது வைஃபை+ எல்டிஇ டேட்டா ஒன்லி, பிளாட்டினம் க்ரே ஆதரவோடு வருகிறது. இந்த டேப் ஆனது ரூ.37,000 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டேப் ஆனது ரூ.24321 என விற்கப்படுகிறது. இந்த டேப்-க்கு ரூ.12,679 என விலை குறைக்கப்பட்டுள்ளது இது 34% தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த டேப் ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு, 11 இன்ச் அளவில் ஆண்ட்ராய்டு 10 ஆதரவுடன் வருகிறது. இது 7500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி முன்புற செல்பி கேமரா வசதியோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் ஆனது 8.7 இன்ச் அளவோடு வருகிறது. இது ஸ்லிம் மெட்டல் பாடி அம்சம், டால்பி அட்மாஸ் சவுண்ட் ஆதரவோடு வருகிறது. இந்த டேப் ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த டேப் ஆனது ரூ.14500 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டேப் ரூ.11,999 என கிடைக்கிறது. இந்த டேப் ஆனது ரூ.2501 என விலைக்குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 17% தள்ளுபடியுடன் இதை வாங்கலாம். இந்த டேப்-க்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது.

English summary
Best Tab Available at Discount Price in Amazon: Here the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X