Home
Deal of the day

அடேங்கப்பா அமேசானில் "இந்த" தரமான போன்களுக்கு இவ்வளவு சலுகையா? வாங்க பார்ப்போம்.!

செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக 5ஜி சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என்பதால் பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

அடேங்கப்பா அமேசானில்

அதேசமயம் சில நிறுவனங்கள் 4ஜி போன்களின் விலையை குறைத்து வருகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அசத்தலான போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.ஒப்போ ஏ54

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அமேசான் தளத்தில் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை ரூ.11,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போனுக்கு அமேசான் தளத்தில் 33 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு 1,080x2,412 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் மாடல். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

2.ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 5 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,999-விலையில் வாங்க முடியும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு 1,080x2,412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W SuperVOOC வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.

3.விவோ Y15s

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y15s போனுக்கு அமேசான் தளத்தில் 32 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,499-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ) ஆதரவு மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 11.1 உடனான ஆண்ட்ராய்டு 11 (கோ பதிப்பு) உடன் இயங்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி ஆதரவோடு வெளிவந்துள்ளது இந்த விவோ போன். குறிப்பாக இந்த போன் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்ல் மேக்ரோ ஷூட்டர் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

வீடியோகால் வசதிகளுக்கு என விவோ ஒய் 15 எஸ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த விவோ Y15s போன்.

4.ரெட்மி நோட் 11

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 போனுக்கு அமேசான் தளத்தில் 24 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11.

இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 13எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

5.ரெட்மி நோட் 10எஸ்


அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனுக்கு 21 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் போன்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

English summary
Best smartphones available at discounted prices on Amazon: Here's the list.: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X