Home
Deal of the day

ரூ.8000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்- 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு10 ஆதரவு: அமேசான் சலுகை!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு என இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனி வரவேற்பு இருக்கிறது. கொரோனா தொற்று பரவல் முதல் பல்வேறு தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் என்பது பிரதானமாக இருக்கிறது. குறிப்பாக ஆன்லைன் வகுப்பு, ஆன்லைன் தேர்வு, வீட்டில் இருந்தே வேலை என்ற பல்வேறு தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் தேவைக்கப்படுகிறது. வீட்டில் ஆளுக்கு ஒருவர் கையில் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் படிப்புத் தேவைக்கு என வீட்டில் ஒரு குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பது என்பது கட்டாயமாக இருக்கிறது. ரெட்மி, ரியல்மி, டெக்னோ நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

ரூ.8000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்- அமேசான் சலுகை!

ரெட்மி 9ஏ ஸ்போர்ட்

ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனானது கார்பன் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8,468 என்ற விலையோடு அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது வெறும் ரூ.7,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 11% தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி25 ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இது டூயல் சிம் ஆதரவை கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50ஐ

ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனானது காப்ரன் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ,.7999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.7499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் 8 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா வசதியைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் ஆக்டோ கோர் ப்ராசஸர் சிப்செட் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது.

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன்

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனானது ஐஸ் ப்ளூ வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 8 எம்பி டூயில் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஃப்ரண்ட் பிளாஷ் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ஆனது ரூ.6899 என இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் டாட் நாட்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 48 மணிநேர வீடியோ ப்ளேபேக் வசதியை வழங்குகிறது. 5 எம்பி முன்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ட்ரெண்டி மற்றும் ஸ்டைலிஷ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனானது சீ ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஹீலியோ ஜி25 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ஆனது ரூ.9499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.8299 என விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% வரை தள்ளுபடி கிடைக்கிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் இந்த சாதனத்தை வாங்கலாம்.13 எம்பி ரியர் கேமரா வடிவமைப்போடு இந்த சாதனம் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5 எம்பி முன்புற கேமரா வடிவமைப்போடு வருகிறது. இதில் 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் மல்டி டச் டிஸ்ப்ளே வசதி, ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, மீடியாடெக் ஹீலியோ ஜி25 ஆக்டோ கோர் ப்ராசஸர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன்

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனானது மார்பியர் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி டூயல் கேமரா மற்றும் ஆக்டோ கோர் ப்ராசஸர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8999 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7699 என விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் நானோ சிம் ஆதரவோடு வருகிறது.

File Image

English summary
Best smartphones are Available on Amazon for less than Rs.8000: Here the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X