Home
Deal of the day

ரூ.5000 முதல் Android போன் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் மாடல்கள் இதுவே.!

தீபாவளி பண்டிகை முடிந்தாலும், இன்னும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் சலுகைகளும், தள்ளுபடிகளும் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. ஆம், பண்டிகை முடிந்த பின்னரும் இன்னும் சில தயாரிப்புகள் மீது சிறப்பான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது, கிடைக்கும் சலுகையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், உங்களால் வெறும் ரூ. 5,000 விலையில் புதிய ஸ்மார்ட்போன் டிவைஸை வாங்க முடியும்.

ரூ.5000 முதல் Android போன் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் மாடல் இதோ.!

ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், வெறும் ரூ. 5,000 விலை வரம்பு முதல் கிடைக்கும் பெஸ்டான புது ஸ்மார்ட்போன் மாடல்களை (Best Smartphones) தான் இந்த பதிவில் உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய சில குறிப்பிட்ட பிராண்ட் என்றால் அது redmi மற்றும் realme தான். இந்த பிராண்ட்களில் இருந்து கிடைக்கும் சிறந்த கம்மி விலை ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த பட்டியலிட்டுள்ளோம். ஸ்கிப் செய்யாமல் லிஸ்டை முழுமையாகப் பாருங்கள்.

1. realme narzo 50i


குறைந்த விலையில் மிகவும் டீசெண்டான அம்சங்களுடன் நமது பட்டியலில் இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இது தான். இதன் அசல் விலை ரூ. 7,999 ஆகும். ஆனால், இப்போது கிடைக்கும் சலுகையில், இதன் வெறும் ரூ. 5,749 என்ற விலைக்கு இதை நாம் வாங்க முடியும். உங்களிடம் பழைய ஆண்ட்ராய்டு போன் இருந்தால், அதை ரூ. 5,450 வரை எக்ஸ்சேஞ் செய்து, இதன் விலையை இன்னும் அதிகமாகக் குறைக்க முடியும்.

2. Redmi A1


கம்மி விலையில் லேட்டஸ்ட் அம்சங்களுடன் கிடைக்கும் சூப்பர் ட்ரெண்டி ஸ்மார்ட்போன் என்றால் அது இந்த Redmi A1 மாடலை தான் சாரும். இந்த போன் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 6,499 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ரூ. 6,150 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் இத்துடன் கிடைக்கிறது.

3. Tecno Spark 9


கம்மி விலையில் அதிகமான ரேம் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டும் தான் என்பதை கவனிக்க மறக்காதீர்கள். இந்த ஸ்மார்ட்போன் 7ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 11,499 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 7,799 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ. 7,400 வரையிலான எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

4. realme narzo 50i Prime


பார்ப்பதற்கே ராயலான தோற்றத்தில், சிறப்பான அம்சங்களுடன் கிடைக்கும் பெஸ்டான மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் மக்களை அதிகம் ஈர்த்த மாடல் இதுவாகும். இது இப்போது முறையே ரூ. 7,550 மற்றும் ரூ. 7,999 என்ற எக்ஸ்சேஞ் மற்றும் தினசரி சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும்.

5. Redmi 10A


குறைந்த விலையில் பெஸ்டான போன் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய மாடல் இந்த Redmi 10A மட்டும் தான். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். இதன் சலுகை இப்போது ரூ. 8,499 விலையில் கிடைக்கிறது. இந்த டிவைஸ் மீது உங்களுக்கு இப்போது ரூ. 8,050 தள்ளுபடி கிடைக்கிறது.

6. realme narzo 50


இந்த பட்டியலில் உங்களுக்கு கிடைக்கும் பெஸ்டான லாஸ்ட் டிவைஸ் இது தான். ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இப்போது இது சலுகை விலை ரூ. 9,999 கிடைக்கிறது. இதன் மீது எக்சேஞ் சலுகையாக ரூ.9,450 விலையில் கிடைக்கிறது.

கம்மி விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால், இந்த மாடல்களை தாராளமாக நீங்கள் நம்பி வாங்கலாம்.

English summary
Best Seller Smartphones From Amazon That You Can Buy From Rs 5000 Today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X