Home
Deal of the day

ஆடி தள்ளுபடியில கூட இவ்வளவு கிடைக்கல.! Vivo Y சீரிஸ் போன்கள் மீது அல்டிமேட் தள்ளுபடி.!

தமிழர்களுக்குத் தள்ளுபடி என்று சொன்னாலே ஆடி மாதம் தான் ஞாபகம் வரும்.! தள்ளுபடி என்றாலே ஆடி மாதம் தானே.! துணிக்கடை முதல் எலெக்ட்ரோனிக்ஸ் ஸ்டோர்கள் வரை எங்குப் பார்த்தாலும் ஆடி தள்ளுபடி, அட்டகாச தள்ளுபடி என்று பேனர்கள், போஸ்டர்கள் என்று எங்கு திரும்பினாலும் தள்ளுபடி மழை பொழிந்து கொண்டிருக்கும். ஆனால், அப்போதெல்லாம் கிடைக்காத ஒரு அல்டிமேட் தள்ளுபடியை Vivo நிறுவனம் இப்போது வழங்கியுள்ளது.

ஆடி தள்ளுபடியில கூட இவ்வளவு கிடைக்கல.! Vivo Y சீரிஸ் மீது தள்ளுபடி!

ஆம், விவோ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் உள்ள Y சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது இப்போது நம்ப முடியாத சலுகையை அறிவித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், Vivo Y சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது தாராளமான சலுகையை நிறுவனம் வழங்கியுள்ளது. விவோ என்று சொன்னாலே சிறந்த கேமரா அம்சம் கிடைக்கும் என்பதை நம்மால் மறக்க முடியாது. இப்படி Y சீரிஸ் வரிசையில் இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.

1. Vivo Y01


விவோவின் Y சீரிஸ் வரிசையில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாக இந்த Vivo Y01 மாடல் இருக்கிறது. டீசெண்டான ஸ்பேஸ்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் மீது உங்களுக்கு ரூ. 7,550 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2. vivo Y15s


உங்கள் பட்ஜெட் வெறும் ரூ.10,000 தான் என்றால், நீங்கள் யோசிக்காமல் தேர்வு செய்ய வேண்டிய ஸ்மார்ட்போன் மாடல் vivo Y15s மட்டுமே. காரணம், இது இப்போது வெறும் ரூ.9,499 என்ற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இது டூயல் கேமராவுடன் நியாயமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இதன் மீது எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ. 9,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

3. vivo Y16


பட்ஜெட் விலையில் வாங்க பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். பார்த்தவுடனேயே இந்த vivo Y16 ஸ்மார்ட்போனை உங்களுக்கு பிடித்துவிடும். பெரிய டிஸ்பிளே, பெரிய பேட்டரி, AI டூயல் கேமரா என்ற எல்லா அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 12,499 விலையில் வாங்க கிடைக்கிறது.

4. vivo Y22


பெஸ்டான கேமரா அம்சத்தை பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர் நீங்கள் என்றால், உங்கள் தேர்வு இந்த vivo Y22 ஆக இருக்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 17,990 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சிறப்பு சலுகையின் மூலம் இந்த சாதனத்தை நாம் வெறும் ரூ. 14,499 என்ற விலையில் வாங்க முடியும். எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ. 13,750 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

5. Vivo Y33T


ட்ரெண்டியான ஒரு ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க ஆசைப்பட்டால், நீங்கள் இந்த Vivo Y33T மாடலை தாராளமாக வாங்கலாம். இப்போது கிடைக்கும் சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 17,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 22,990 ஆகும். எக்ஸ்சேஞ் சலுகை விருப்பமாக இதன் மீது ரூ. 17,000 தள்ளுபடி கிடைக்கிறது.

6. vivo Y35


ஸ்டைலான ஒரு ஸ்மார்ட்போன் வேண்டுமா? அப்போ யசோதிக்காதீங்க இந்த vivo Y35 போனை உடனே வாங்கிடுங்க. உங்களுக்குத் தேவையான அணைத்து பெஸ்டான அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 22,999 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகையை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வெறும் ரூ. 18,499 விலையில் வாங்கிவிடலாம். உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்யும் போது, இதன் மீது உங்களுக்கு ரூ. 17,250 வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த அணைத்து ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் இப்போது கூடுதல் வங்கி சலுகைகள் கிடைப்பதனால், இதன் தற்போதைய சலுகை விலையில் இருந்து, உங்களால் இன்னும் கணிசமான தொகையைக் குறைக்க முடியும் என்பதையும் மறக்காதீர்கள். இந்த சலுகை சலுகை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது பற்றிய தகவல் சரியாக தெரியாததால், உடனே முந்தி உங்களுக்கான புது ஸ்மார்ட்போனை பர்ச்சேஸ் செய்துகொள்ளுங்கள்.

English summary
Best Deals On Vivo Y Series Smartphones To Buy Now At Budget Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X