அடிமட்ட விலையில் Tablet-கள்.. ரூ 3000 குறைச்ச OnePlus, ரூ.5000 குறைச்ச Xiaomi, ரூ.28000 குறைச்ச Samsung!
அமேசான் இந்தியா வலைதளத்தில் நடக்கும் கிரேட் சம்மர் சேல் 2026 விற்பனையின் கீழ் உங்களுடைய தேடல் ஸ்மார்ட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் அல்லது ஸ்மார்ட் டிவிகள் மீதான ஆபர்கள் மீது அல்ல.. மாறாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டேப்லெட்கள் (Android an iOS Tablets) மீது தான் இருக்கிறதா?
ஆம் என்றால், கவலையை விடுங்கள். நீங்கள் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். அமேசான் தற்போது அதிகம் விற்பனையாகும் டேப்லெட்டுகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஒன்பிளஸ், சாம்சங், ஷாவ்மீ மற்றும் லெனோவா போன்ற பல ஆண்ட்ராய்டு பிராண்டுகள், நடைபெற்று வரும் இந்த விற்பனையில் தங்களின் லேட்டஸ்ட் டேப்லெட்டுகளை ஆபர் விலையில் விற்பனை செய்கின்றன.

ஆப்பிளின் ஐபேட் மாடல்களும் இந்த விற்பனையில் தள்ளுபடிகளுடன் பட்டியலிடப்பட்டு உள்ளன. மேலும் இந்த சிறப்பு விற்பனையை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்ற, எச்டிஎப்சி (HDFC) கார்டு பயனர்கள் கிரெடிட் கார்டு அல்லது இஎம்ஐ மூலம் வாங்கும் போது 10 சதவீதம் வரை சேமிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரி என்னென்ன டேப்லெட் மாடல்கள் மீது நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? இதோ லிஸ்ட்:
1. ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite): இது அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
2. ஆப்பிள் ஐபேட் 11 (Apple iPad 11): இது அசல் விலையான ரூ.34,900 க்கு பதிலாக ரூ.33,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
3. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் (Samsung Galaxy Tab A11 Plus): இது அசல் விலையான ரூ.27,999 க்கு பதிலாக ரூ.23,499என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
4. லெனோவா ஐடியா டேப் (Lenovo Idea Tab): இது அசல் விலையான ரூ.29,000 க்கு பதிலாக ரூ.23,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
5. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 (Samsung Galaxy Tab S11): இது அசல் விலையான ரூ.1,13,999 க்கு பதிலாக ரூ.85,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
6. ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8): இது அசல் விலையான ரூ.40,999 க்கு பதிலாக ரூ.35,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
ஷாவ்மீ பேட் 8 முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 11.2-இன்ச் (3200 x 2136) 3:2 எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.. இது 144ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 345 பிபிஐ, 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10, டால்பி விஷன், 12-பிட் கலர்ஸ், ஹார்ட்வேர்-லெவல் லோ ப்ளூ லைட்டிற்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 12ஜிபி LPDDR5T ரேம் வெர்ஷன்களை 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ பேட் 8 மாடல் ஆனது பேக் பேனலில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13எம்பி ப்ரைமரி சென்சாரையும் மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி எப்/2.28 செல்பீ சென்சாரையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொண்ட 9200mAh பேட்டரியை கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் வி6.0, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி யுஎஸ்பி 3.2 ஜென் 1 போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இது 4-மைக் அமைப்புடன் இணைக்கப்பட்ட டால்பி அட்மோஸ் கொண்டு இயங்கும் குவாட் ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.


Click it and Unblock the Notifications