பட்ஜெட் விலையில் பெஸ்டான ஆல்ரவுண்டர் 5G போன் வேண்டுமா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!
சில பேசிக் டெக் தொடர்பான தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தாலே, உங்களுக்கு தேவையான ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் சாதனத்தை நீங்கள் வாங்கிவிட முடியும். ஆனால், 'சரியான' பெஸ்ட் சாதனத்தைத் தேர்ந்தெடுப்பது தான் இங்குப் பலருக்கும் இருக்கிற சிக்கலாக இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், இந்திய சந்தையில் எண்ணில் அடங்காத அளவிற்கு, வெவ்வேறு விலை பிரிவில் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் வாங்கக் கிடைக்கிறது. இதிலிருந்து உங்களுக்கான டிவைஸை தேர்வு செய்வது தான் சிக்கலாக இருக்கிறது.

இதுபோன்ற, சிக்கலை சந்திக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான். குறிப்பாக நீங்கள் ஒரு பெஸ்டான ஆல்ரவுண்டர் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலைக்குள் வாங்க நினைக்கிறீர்கள் என்றால், இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல்களை கொஞ்சம் பாருங்கள். உங்களுக்காகவே, பெஸ்டான போன்களை தேர்வு செய்துள்ளோம். குறிப்பாக இவை அனைத்தும் 5G இல் இயங்கும் பட்ஜெட் போன்களை என்பது குறிப்பிடத்தக்கது.
1. iQOO Z6 5G
இந்த iQOO Z6 5G ஸ்மார்ட்போன் உங்களுக்கு பட்ஜெட் விலையில் சலுகையுடன் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 19,990 ஆகும். ஆனால், தற்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இந்த டிவைஸ் இப்போது வெறும் ரூ. 14,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 25% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையைச் சரியாக பயன்படுத்திக்கொண்டால் உங்களுக்கு ரூ. 4,991 மிச்சமாகும்.
2. Redmi Note 11T 5G
நீங்கள் ஒரு ரெட்மி பயனர் என்றால், உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை 5ஜி சேவைக்கு மாற்ற விரும்பும் நபர் என்றால், உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் தான். இதன் அசல் விலை ரூ. 20,999 ஆகும். இப்போது இது சலுகை உடன் வெறும் ரூ. 17,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 14% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையை சரியாக பயன்படுத்திக்கொண்டால் ரூ. 3,000 என்ற தொகையை நீங்கள் சேமிக்கலாம்.
3. Infinix Zero 5G
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நம்பகமான பிராண்டில் இருந்து வாங்க கிடைக்கும் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். Infinix Zero 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 24,999 ஆகும். இப்போது இது சலுகை உடன் வெறும் ரூ. 17,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 28% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் ரூ. 7,000 என்ற தொகையை நீங்கள் தள்ளுபடியாகப் பெறலாம்.
4. OnePlus Nord CE 2 Lite 5G
மிகவும் பிரபலமான பிராண்டில் இருந்து ஒரு பெஸ்டான ஆல்ரவுண்டர் போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நிச்சயமாக நீங்கள் OnePlus Nord CE 2 Lite 5G மாடலை தான் தேர்வு செய்ய வேண்டும். இதன் அசல் விலை ரூ. 19,999 ஆகும். இப்போது இது சலுகை உடன் வெறும் ரூ. 18,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 5% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் ரூ. 1,000 ஐ நீங்கள் சேமிக்கலாம்.
5. realme Narzo 50 Pro 5G
பெஸ்டான ஆல்ரவுண்டர் பட்டியலில் நாம் இறுதியாகப் பார்க்கும் மாடல் இந்த realme Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போன் மாடல் தான். இதன் அசல் விலை ரூ. 25,999 ஆகும். இப்போது இது சலுகை உடன் வெறும் ரூ. 19,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 23% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் ரூ. 6,000 என்ற தொகையை நீங்கள் மிச்சம் பிடிக்கலாம்.
இந்த 5 பெஸ்டான ஆல்ரவுண்டர் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஆகச்சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களாகும். உங்கள் விருப்பம் எது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications