அமேசானில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு இவ்வளவு சலுகையா? முந்துங்கள்.!
இந்தியாவில் தற்போது சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் டிவிகளை அறிமுகம் செய்தால் அதிக வரவேற்பு உள்ளது.

அதிலும் சியோமி நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மாரட் டிவிகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
1.ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32Y1
அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32Y1 மாடலுக்கு 30 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது.
அதேபோல் 1366x768 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32Y1 மாடல்.
கலர் ஸ்பேஸ் மேப்பிங், டைனமிக் கான்ட்ராஸ், காமா எஞ்சின் போன்ற அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இதுதவிர எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக Chromecast ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32Y1 மாடல்.
2.சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி
32-இன்ச் கொண்ட சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி (UA32T4340BKXXL) மாடலுக்கு அமேசான் தளத்தில் 32 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,490-விலையில் வாங்க முடியும். இந்த சாம்சங் டிவி 1366×768 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் 20 வாட்ஸ் ஸ்பீக்கர் ஆதரவு, அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் பிக்ஸ்பி குரல் ஆதரவு போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி மாடல்.
இதுதவிர எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் டிவி. மேலும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆடியோ ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி மாடல்.
3.சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ
அமேசான் தளத்தில் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலுக்கு 44 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடல்.
அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி. பின்பு டால்பி ஆடியோ ஆதரவு கொண்டு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஈதர்நெட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடல்.
4.ஏசர் ஸ்மார்ட் எல்இடி டிவி (AR32AR2841HDFL)
அமேசானில் தரமான 32-இன்ச் ஏசர் ஸ்மார்ட் எல்இடி டிவி (AR32AR2841HDFL) மாடலை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.
அதாவது 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
இதுதவிர டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், Chromecast ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், யுஎஸ்பி போர்ட், போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி. மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.
5.Vu பிரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் எல்இடி டிவி (32UA)
32-இன்ச் கொண்ட ஏர (32UA) ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 35 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக லினக்ஸ் ஸ்மார்ட் ஓஎஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த Vu ஸ்மார்ட் டிவி மாடல்.
மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், அடாப்டிவ் கான்ட்ராஸ்ட், கிளியர் மோஷன் போன்ற பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.


Click it and Unblock the Notifications