Home
Deal of the day

Apple-ஏ இறங்கிடுச்சா.. இதான் சரியான சான்ஸ்.. லேட்டஸ்ட் MacBook மீது முரட்டு டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

லேட்டஸ்ட் ஆப்பிள் மேக்புக்கை ஆபர் விலையில் வாங்க இதுவே சரியான நேரம். ஆப்பிளின் லேட்டஸ்ட் மேக்புக் ஏர் எம்4 (Apple MacBook Air M4) மாடலின் விலையில் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மேக்புக் மாடல் மீது இப்போது ரூ.17,910 வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது.

விஜய் சேல்ஸ் (Vijay Sales) இல் தற்போது ஸ்கை ப்ளூ கலரில் உள்ள மேக்புக் ஏர் எம்4 மாடலின் 16ஜிபி ரேம் + 256ஜிபி எஸ்எஸ்டி ஆப்ஷன் ஆனது ரூ.91,990 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விலை ரூ.99,900 ஆகும். அதாவது இது ரூ.7,910 நேரடி விலை குறைப்பை பெறுகிறது.

லேட்டஸ்ட் MacBook மீது முரட்டு டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

அதற்கு மேலாக, ஐசிஐசிஐ வங்கி அல்லது எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 கூடுதல் உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. இது மேக்புக் ஏர் எம்4 மாடலின் விலையை ரூ.81,990 ஆக குறைத்து, கிட்டத்தட்ட ரூ.17,910 மொத்த தள்ளுபடியை வழங்குகிறது.

இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களின் மீது மட்டுமே கிடைக்கிறது, மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் டிவைஸ்களின் மீது அறிவிக்கப்படும் இதுபோன்ற சலுகைகள் நீண்ட காலம் நீடிக்காது என்பதால், வாங்குபவர்கள் தங்கள் ஆர்டரை பிளேஸ் செய்வதற்கு முன் கிடைக்கும், குறிப்பிட்ட ஆபர் கிடைக்கிறதா என்பதை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 முக்கிய அம்சங்கள்: மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 13-இன்ச் (2,560×1,664 பிக்சல்ஸ்) மற்றும் 15-இன்ச் (2,880×1,864 பிக்சல்ஸ்) சூப்பர் ரெடினா டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேக்கள் 224பிபி பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டது. இந்த ஆப்பிள் லேப்டாப்கள் 6கே ரெசல்யூஷனில் 2 எக்ஸ்டர்னல் டிஸ்பிளேக்களை ஆதரிக்கும் (லேப்டாப் திறந்திருக்கும் போது) என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 ஆனது எம்4 சிப் உடன் வருகிறது. இதில் நான்கு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு எஃபீஷியன்சி கோர்கள் கொண்ட 10-கோர் சிபியு உள்ளது. இந்த லேப்டாப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின், 8-கோர் ஜிபியு மற்றும் ஹார்டுவேர் ஆக்சிலரேட்டட் ரே டிரேசிங்கிற்கான ஆதரவும் உள்ளது.

மேக்புக் ஏர் 2025 மாடலை 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் கட்டமைக்க முடியும. மேலும் இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் த்ரீ-மைக் செரீஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் செட்டப்பையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது Wi-Fi 6E மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் இது இரண்டு தண்டர்போல்ட் 4/ யூஎஸ்பி 4 போர்ட்கள், ஒரு மேக்சேப் 3 சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது டச் ஐடி பட்டனையும் கொண்டுள்ளது, இது லேப்டாப்பை அன்லாக் செய்ய பயன்படுகிறது. இது ஃபோர்ஸ் க்ளிக்குகள் மற்றும் மல்டி-டச் சைகைகளுக்கான ஆதரவுடன் ஃபோர்ஸ் டச் டிராக்பேடையும் கொண்டுள்ளது.

சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவுக்கான ஆதரவுடன் 1080p ஃபேஸ்டைம் கேமராவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 13-இன்ச் மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரியை 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. ஆனால் இது 30W யூஎஸ்பி டைப்-சி பவர் அடாப்டருடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள 15-இன்ச் மாடல் சற்று பெரிய 66.5Wh பேட்டரியை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி இது 15 மணிநேர இண்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் மூலம் 18 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple MacBook Air M4 Offer in Vijay Sales How to get Rs 17910 Discount And Buy It For Rs 81990
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X