அமேசான் சேல் 2025: 50எம்பி கேமரா, 6500mAh பேட்டரி கொண்ட Vivo 5ஜி போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?
அமேசான் சிறப்பு விற்பனையில் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி (Vivo Y31 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த விவோ போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்31 ப்ரோ 5ஜி போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.17749 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்31 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo Y31 Pro 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 பிராசஸர் (MediaTek Dimensity 7300 Processor) உடன் இந்த புதிய விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராஸசர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 2408 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பிரைட்னஸ், 393 ppi உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது.
விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு வைஃபை 5, புளூடூத் வி5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ட்ரீமி ஒயிட் மற்றும் மோச்சா பிரவுன் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications