ரூ.500, ரூ.1000 இல்ல.. ரூ.6500 டிஸ்கவுண்ட்.. வாய் பிளக்க வைக்கும் ஆபர் விலையில் OnePlus 5ஜி போன்!
2025 செப்டம்பர் 23 ஆம் தேதி "நெருங்க நெருங்க" அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது அதன் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025க்கான (Great Indian Festival Sale 2025) பெஸ்ட் மொபைல் டீல்களை (Best Mobile Deals) "மெல்ல மெல்ல" வெளிப்படுத்தி வருகிறது.
அதனொரு பகுதியாக - அமேசான் இந்தியா வலைதளத்தில் - ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பட்ஜெட் விலை 5ஜி மாடல் ஆன ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி (OnePlus Nord CE 4 5G) ஸ்மார்ட்போன் மீதான சலுகைகள் குறைத்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.

நினைவூட்டும் வண்ணம், இது கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.24,999 ஆக இருந்தது.
தற்போது செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள, அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2025 விற்பனையின் ஒரு பகுதியாக இது ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பேங்க் ஆபரை (Bank Offer) உள்ளடக்கிய விலை ஆக இருக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) உடன் இயங்குகிறது. 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது.
இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) மற்றும் 8ஜிபி LPDDR4x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேமிங்கிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது.
ஐபி54 ரேட்டிங், ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 15 நிமிட சார்ஜிங்கில் இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது, அதேசமயம் வெறும் 29 நிமிடங்களில் 1 முதல் 100% சார்ஜ் ஆகிவிடும்.
கடந்த ஜூலை மாதம் 7,100mAh பேட்டரி உடன் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் மற்றும் விலை: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான சற்றே சிறிய 6.77-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் 12ஜிபி வரை LPDDR5x RAM உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) சிப்செட் கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது.
இது சோனி LYT-600 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது. ப்ரைமரி கேமராவுடன் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், இது OV08D10 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 7,100mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது சேர்க்கப்பட்ட அடாப்டருடன் 80W சூப்பர்வூக் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65 ரேடிங்கையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications