Home
Deal of the day

அமேசானில் சலுகை விலையில் கிடைக்கும் விவோ, ஒப்போ போன்கள்: மிஸ் பண்ணாதீங்க!

அமேசான் தளத்தில் தொடர்ந்து சில ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான சலுகை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விவோ, ஒப்போ, சியோமி ஸ்மார்ட்போன்களை தற்போது அமேசான் தளத்தில் கம்மி விலையில் வாங்க முடியும்.

அமேசானில் சலுகையில் விலையில் கிடைக்கும் விவோ, ஒப்போ போன்கள்.!

அதேபோல் அமேசான் நிறுவனத்திற்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனம் சில போன்களுக்கு தள்ளுபடியை அறிவித்து வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

1.விவோ Y21T

அமேசான் தளத்தில் விவோ Y21T ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனை தற்போது ரூ.15,499-விலையில் வாங்க முடியும்.இந்த புதிய Vivo Y21T ஆனது Funtouch OS 12 உடன் Android 11 இல் இயங்குகிறது. இது 6.51 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது.மேலும் இந்த போன் ஹூட்டின் கீழ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த விவோ போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பிகேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜிபி ரேம்,128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ Y21T போன்.

2.ஒப்போ ஏ74 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போனுக்கு 29 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் 1080x2400 பிக்சல்ஸ்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி.

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பிசெல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

3.விவோ Y21G

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y21G ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவோ ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.

இந்த விவோ ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விவோ Y21G ஸ்மார்ட்போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.

4.ஒப்போ ஏ31

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வசதி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி main சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6765 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. ஒப்போ ஏ31 சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5.விவோ Y33T

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y33T ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 22 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,990-விலையில் வாங்க முடியும்.

விவோ Y33T ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக விவோ Y33T போனில் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

English summary
Amazon Offer Announced for Oppo,Vivo Smartphones: Full Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X